
posted 20th June 2022
தந்தைக்கு பின்னர், தாயாரின் இறுதிச் சடங்கை நடத்துவதற்காக யாழ்ப்பாணம் அழைத்து வரப்பட்டுள்ளார் அரசியல் கைதியான விக்னேஸ்வரநாதன் பார்த்தீபன்.
26 ஆண்டுகளாக சிறையில் வாடும் பார்த்தீபன் நேற்று அவரின் இல்லத்துக்கு கடும் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டார். அவரின் தந்தையின் இறுதி சடங்குக்காக 2017ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்துக்கு அழைத்து வரப்பட்டவர், தற்போது தாயாரின் இறுதிச் சடங்குக்காக அழைத்து வரப்பட்டிருப்பது அனைவர் மத்தியிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
1996ஆம் ஆண்டு மத்திய வங்கி குண்டுவெடிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட பார்த்தீபனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த வழக்குக்கு எதிராக மேன்முறையீடு செய்யப்பட்ட வழக்கு இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில், திருநெல்வேலியில் வசித்து வந்த அவரின் தாயாரான விக்னேஸ்வரநாதன் வாகீஸ்வரி (கண்ணாடி அம்மா) கடந்த புதன்கிழமை காலமானார். அவரின் இறுதிக் கிரியையில் பங்கேற்பதற்கு அவருக்கு ஒரு மணி நேரம் அளிக்கப்பட்டது. இதற்கமைய அவர், இறுதிச் சடங்கில் நேற்று பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)