138 வைத்திய அதிகாரிகள் வடமாகாணத்திற்கு புதிதாக நியமனம் - கேதீஸ்வரன்

வடமாகாணத்திற்கு138 வைத்திய அதிகாரிகளுக்கு புதிதாக நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இன்று அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்வாறு வெளியிட்டுள்ளார். அதில் மேலும் குறிப்பிட பட்டுள்ளதாவது.

மத்திய சுகாதார அமைச்சினால் உள்ளக பயிற்சியை நிறைவுசெய்த வைத்திய அதிகாரிகளுக்கு கடந்த மே மாதம் 30ஆம் திகதி முதல் நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இதில் வடமாகாணத்திற்கு 138 வைத்திய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இவர்களில் 132 வைத்திய அதிகாரிகள் இதுவரை தமது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்கள். இதில் யாழ் மாவட்டத்திற்கு 23 வைத்திய அதிகாரிகளும், கிளிநொச்சி மாவட்டத்திற்கு 22 வைத்திய அதிகாரிகளும், வவுனியா மாவட்டத்திற்கு 22 வைத்திய அதிகாரிகளும், மன்னார் மாவட்டத்திற்கு 35 வைத்திய அதிகாரிகளும், முல்லைத்தீவு மாவட்டத்திற்கு 31 வைத்திய அதிகாரிகளும் கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

138 வைத்திய அதிகாரிகள் வடமாகாணத்திற்கு புதிதாக நியமனம் - கேதீஸ்வரன்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY