விலங்கு கடிகளுக்கான தடுப்பு மருந்துகள் இல்லை - பக்தர்களைப் பாதுகாக்க வினோதன் நடவடிக்கை

வைத்தியசாலைகளில் தற்பொழுது விலங்கு மற்றும் விசர் நாய் கடிகளுக்கான தடுப்பு மருந்து வகைகள் இன்மையால் மடு பெருவிழாவுக்கு வருவோரின் பாதுகாப்பு கருதி, நாய்கள் அப்பகுதிக்குள் உலாவுவதை தடுத்து நிறுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது என மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ரி. வினோதன் தெரிவித்தார்.

எதிர்வரும் ஆடி மாத மடு பெருவிழா தொடர்பாக மன்னார் மாவட்ட செயலகத்தில் அரச அதிபர் தலைமையில் அண்மையில் நடைபெற்ற கலந்துரையாடலின்போது பணிப்பாளர் ரி.வினோதன் கருத்து தெரிவிக்கையில்;

எதிர்வரும் ஆடி மாத மடு அன்னை பெருவிழாவுக்கு இம்முறை கட்டுப்பாடற்ற முறையில் பக்தர்கள் வருகை தர அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

மடுத்திருப்பதி ஒரு கானகப் பகுதியில் அமைந்திருப்பதால், பக்தர்கள் இம்முறை பெருந் தொகையாக வர இருப்பதால், அயல் கிராமங்களிலிருந்து கட்டாக்காலி நாய்களும் அவ்விடத்திற்கு உணவு தேடி வரக்கூடிய சந்தர்ப்பங்கள் உண்டு.

ஆகவே, பக்தர்களை விலங்குக்கடியினால் ஏற்படும் நோயிலிருந்து காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கடப்பாடு எமக்குண்டு என்று வினோதன் தெரிவித்தார்.

விலங்கு கடிகளுக்கான தடுப்பு மருந்துகள் இல்லை - பக்தர்களைப் பாதுகாக்க வினோதன் நடவடிக்கை

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY