விறகு பொறுக்கச் சென்ற சிறுவன் மரம் முறிந்ததால் மரணம்

தனது அத்தையுடன் காட்டுப் பகுதிக்குள் விறகு சேகரிக்கச் சென்ற மாணவர் ஒருவன் மரத்தில் ஏறியபோது மரம் முறிந்து விழுந்ததில் சம்பவ இடத்திலே மரணத்தை தழுவிக் கொண்ட துர்பாக்கிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (12.06.2022) காலை பத்து மணியளவில் மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள புரவுண்லோ தோட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச் சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது;

மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள புரவுண்லோ தோட்ட பகுதியில் உள்ள ஆடை தொழிற்சாலை பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் சமனெளிய சிங்கள பாடசாலையில் கல்வி பயிலும் மாணவன் சேனாதீர ரஞ்சித் துல்ஷான் (வயது 14) ஞாயிறு காலை தனது அத்தையுடன் காட்டுக்குள் விறகு தேடிச் சென்றுள்ளனர்.

அப்பொழுது அத்தை காட்டுக்கள் விறகு சேகரித்துக் கொண்டிருந்த வேளையில் சிறுவன் அப்பகுதிக்கள் இருந்த மரம் ஒன்றில் ஏறியதாகவும் அம் மரக்கிளை முறிந்து விழுந்தபொழுது அச் சிறுவனும் அம் மரக்கிளையுடன் கீழே விழுந்ததாகவும் அம் மரத்துக்கு கீழ் இருந்த கற்பாறையில் தலையடிப்பட கீழே விழுந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அவசர நோயாளர் காவு வண்டிக்கு அறிவிக்கப்பட்டு இச் சிறுவனை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டபோதும், அச் சிறுவன் சம்பவ இடத்திலேயே இறந்ததும் தெரியவந்தது.

இம் மரணம் தொடர்பாக மஸ்கெலியா பொலிசார் விசாரனை மேற்கொண்டுள்ளனர்.

விறகு பொறுக்கச் சென்ற சிறுவன் மரம் முறிந்ததால் மரணம்

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY