
posted 6th June 2022
வடக்கு கிழக்கு பகுதி விவசாயிகளுக்கு தகுந்த காலத்தில் விவசாயத்துக்கான உரம் கிடைக்காமையால் இப் பகுதி விவசாயிகள் மிகவும் பாதிப்புகளுக்கு உள்ளாகின்றார்கள் என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானியருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லேவுக்கு அனுப்பியுள்ள மடலில்;
வடக்கு கிழக்கில் வாழும் பெரும்பாலான தமிழ் மக்கள் விவசாயத்தையே நம்பி வாழ்கின்றனர். தமிழ் மக்கள் தற்பொழுது விவசாய நெற் செய்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவ் விவசாயிகளுக்கு தகுந்த உரங்கள் தகுந்த நேரத்தில் கிடைக்காததால் இவர்களின் விவசாயம் மற்றும் இவர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிப்புகளுக்கு உள்ளாகும் அபாயம் தோன்றியுள்ளது.
எனவே சரியானதை சரியான நேரத்தில் பெறுவதே முக்கியமானதாகும்.
ஆகவே, தாங்கள் இந்திய பிரதமருடன் இதுவிடயமாக கலந்தாலோசித்து இது குறித்து தீர்க்கமான ஒரு முடிவை மேற்கொள்ளுமாறு தமிழ் மக்கள் சார்பாக தங்களை மிக பணிவாக வேண்டி நிற்கின்றேன் என இலங்கைகான இந்திய தூதுவருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY