யாழ் முதல்வரும் கனடிய தூதுவரும் சந்திப்பு

யாழ்ப்பாண மாநகரசபை முதல்வருக்கும் கனடிய தூதரகம் இடையிலான சந்திப்பு இன்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்றது.

இந்தச் சந்திப்பின்போது நாட்டின் தற்போதைய நிலைமைகள் தொடர்பிலும், மாநகர சபையின் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பிலும் மாநகர சபையின் முதல்வர் வி. மணிவண்ணன் மற்றும் ஆணையாளர் த. ஜெயசீலன் ஆகியோருடன் தூதுவர் கலந்துரையாடினார்.

அதனைத் தொடர்ந்து நினைவுச் சின்னங்கள் வழங்கி பரிமாறப்பட்டன.
இது குறித்து மாநகர முதல்வர் தெரிவிக்கையில்;

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் பிரச்சனை, யாழ்ப்பாண மாநகரத்தின் வளர்ச்சித் திட்டங்கள், நாடு இவ்வாறான நிலைமைக்கு போனதற்கான காரணங்கள் தொடர்பில் தூதுவர் கேட்டறிந்தார்.

கடந்த காலத்தில் இடம்பெற்ற யுத்தம் நாட்டின் அபிவிருத்திக்கும், மாநகரத்தின் அபிவிருத்திக்கும் பாரிய பின்னடைவை ஏற்படுத்தியது என்றும் அதனை மீளக் கட்டியெழுப்புவதற்கான விடயங்கள் தொடர்பிலும் தூதுவருக்கு தெரிவித்தேன் என்றார்.

யாழ் முதல்வரும் கனடிய தூதுவரும் சந்திப்பு

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY