மன்னார் றோட்டறிக் கழகத்தின்  உலர் உணவு விநிநோகம்

காயா நகர், பள்ளமடு கிராமங்களுக்கு

மன்னார் றோட்டறிக் கழகத்தினால் பொருளாதார தாக்கத்தினால் அதிகம் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உலர் உணவு விநிநோகத் திட்டத்தின் முதல் பகுதியாக மாந்தை மேற்கு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட 50 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டன .

இந்நிகழ்வு திங்கள் கிழமை (6.5.2022) மதியம் 2 மணியளவில் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் தலைமையில் காயா நகர், பள்ளமடு கிராமங்களில் வழங்கப்பட்டன. ஒவ்வொரு நிராவரணப்பொதியும் 4700.00 பெறுமதியுடையன.

இச்செயற்பாட்டிற்கான நிதி நன்கொடை நேபாளம் நாட்டைச் சேர்ந்த றோட்டறிக் கழகம் வழங்கியிருந்ததுடன், அதனை கொழும்பு மேற்கு றோட்டறிக் கழகத்தின் ஒழுங்குபடுத்தலின் கீழ் மன்னார் றோட்டறிக் கழகம் இவ் பொருட்களை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.


வசந்தபுரத்திற்கு

செவ்வாய் கிழமை (07.06.2022) மாலை 4 மணியளவில் மன்னார் பிரதேச செயலகப் பிரிவில் துள்ளுக்குடியிருப்பு கிராம அலுவலகர் பிரிவிலுள்ள வசந்தபுரத்தில் வறுமை கோட்டுக்குள் வாழும் மக்களில் 50 குடும்பங்களுக்கு 4700 ரூபா பெறுமதியான பொருட்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வானது மன்னார் பிரதேச செயலாளர் எம். பிரதீப் தலைமையில் இடம்பெற்றபோது மன்னார் றோட்டறிக் கழக உறுப்பினர்களும் இதில் கலந்து கொண்டு வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

மன்னார் றோட்டறிக் கழகத்தின்  உலர் உணவு விநிநோகம்

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)