மடு ஆலய விழாவுக்கு வருவோர் தங்க ஆபரணங்களை அணிந்து வருவதை தவிர்க்கவும் - பொலிஸ்

கொவிட் தொற்று நோய்க்கு பிற்பாடு இம்முறை மடு ஆலய பெருவிழாவுக்கு அதிகமான பக்தர்கள் கலந்து கொள்ள இருப்பதால், தற்பொழுது நிலவிவரும் பொருளாதார நெருக்கடியால் கொள்ளையர் கூட்டமும் உட்புகும் சாத்தியம் காணப்படுகின்றது.

எனவே, மடு ஆலயம் வரும் பக்தர்கள் நிதானத்துடன் செயல்பட வேண்டும் என பொலிசார் கேட்டுள்ளனர்.

எதிர்வரும் ஆடி மாதம் 2ந் திகதி (02.06.2022) மன்னார் மறைமாவட்டத்தில் உள்ள யாத்திரிகர் ஸ்தலமான மருதமடு ஆலய பெருவிழா.

இதை முன்னிட்டு கடந்த 23ந் திகதி (23.06.2022) கொடியேற்றத்துடன் நவநாட்கள் இடம்பெற்றுக் கொண்டு இருக்கின்றன.

இதையிட்டு பக்தர்களின் வருகையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

ஆனால் தற்பொழுது பொருளாதார நெருக்கடி காரணமாக கொள்ளையர்கள் இவ்விடத்தை தங்களுக்கு சாதகமாக பாவிக்கும் நிலை அதிகரிக்கலாம் என பொலிசார் எதிர்வு கூறுகின்றனர்.

ஆகவே திங்கள் கிழமை (27.06.2022) மன்னார் அரசாங்க அதிபர் தலைமையில் இவ் ஆலய பெருவிழா தொடர்பான கூட்டம் நடைபெற்றபோது பொலிசார் இங்கு கருத்து தெரிவிக்கையில்;

தங்க ஆபரங்கள் அணிந்து வருவதை தவிர்த்துக் கொள்ளும்படியும், அத்துடன் விலை உயர்ந்த பொருட்களை தங்களுடன் எடுத்து வருவதை தவிர்த்துக் கொள்ளும்படியும், ஆலயம் வரும் பக்தர்களிடம் தெரிவிக்க வேண்டும் என கேட்டுள்ளனர்.

அத்துடன் அதிகமான பொலிசார் சீருடையுடனும், சிவிலிலும் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டள்ளது என பொலிசார் இக் கூட்டத்தின்போது தெரிவித்தனர்.

மடு ஆலய விழாவுக்கு வருவோர் தங்க ஆபரணங்களை அணிந்து வருவதை தவிர்க்கவும் - பொலிஸ்

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now


ENJOY YOUR HOLIDAY