
posted 12th June 2022
தங்கள் கிராமம் , மாவட்டம் மற்றும் இந்த நாட்டில் போதை பொருட்களுக்கு சாவு மணி அடிக்கப்பட வேண்டும் என மன்னார் எருக்கலம்பிட்டி பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடைபெற்றது.
இக் கவனயீர்ப்பு போராட்டமானது, ரஹாமா அமைப்பு ஒலன்டியர்ஸ் போர் லைப் அமைப்பினர்களின் அனுசரனையுடன் எருக்கலம்பிட்டி ஜம்மியதுல் உலமாவினால் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இக் கவனயீப்பு போராட்டமானது எருக்கலம்பிட்டி பொலிஸ் நிலையத்தக்கு முன்பாக ஞாயிற்றுக்கிழமை (12.06.2022) காலை 8 மணி தொடக்கம் காலை 10 மணி வரை இடம்பெற்றது.
இப் போராட்டத்தில் எருக்கலம்பிட்டி கிராம மக்கள், மௌலவிமார், பாடசாலை சமூகம், நலன் விரும்பிகள், பொது அமைப்புக்கள் உட்பட பலரும் கலந்து கொண்டதுடன் போதைப்பொருளுக்கு எதிரான 'போதைக்கு சாவு மணி அடிப்போம்', ’போதை பொருட்களை ஒழித்து மனித மாண்பை மதிப்போம்' போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு இருந்தனர்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)