
posted 23rd June 2022
மன்னாருக்கு பரவலாக எரிபொருள் வருகின்றபோதும் சரியான ஒழுங்கு முறையில் விநியோகம் செய்யப்படாமையால் மக்கள் சிரமப்படுவதுடன், அமைதியின்மையும் எற்படுவதாக பலர் மன்னார் பிரஜைகள் குழுவிடம் முறையீடு செய்வதாக தெரிய வருகின்றது.
மன்னார் மாவட்டத்தில் ஒன்பது எரிபொருள் நிலையங்கள் இருக்கின்றபோதும், இதில் ஒரு சிலவற்றில் மண்ணெணெய் தவிர்ந்த ஏனைய எரிபொருட்கள் மட்டும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது எனவும், பல கிராமபுற மக்கள் நீண்ட தூரம் பிரயாணம் செய்து நீண்ட வரிசையில் நின்றுவிட்டு மண்ணெணெய் பெறமுடியாது ஏமாற்றத்துடன் திரும்பி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், வாகனங்களுக்கும் இந்நிலை ஏற்பட்டு வருவதாக பாதிப்பு அடைந்து வரும் மக்கள் மன்னார் பிரஜைகள் குழுவிடம் முறையீடு செய்து வருகின்றனர்.
மன்னார் மாவட்டத்தில் பிரதேச செயலகங்களினால் எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் பதிவு செய்யப்படும், அட்டைகள் ஒவ்வொரு குடும்பங்களுக்கும் வழங்கப்பட்டிருக்கின்றபோதும், இதன் ஒழுங்கு முறையில் இப் பொருட்கள் வழங்கப்படாது வரிசை முன்னிலையில் இருப்பவர்களை கொண்டு பொருட்கள் வழங்கப்படுவதனால், விற்பனை நிலையங்களுக்கு அருகிலுள்ளவர்கள் ஒவ்வொரு முறையும் பொருட்கள் மற்றும் எரிபொருள் வந்ததும் அவர்களே அதிகம் பெற்றுச் செல்லும் வாய்ப்புக்கள் இருப்பதாக மக்கள் முறையீடு செய்து வருகின்றனர்.
ஆகவே, இது தொடர்பாக மன்னார் பிரஜைகள் குழு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்து மன்னார் மாட்டத்துக்கு வரும் எரிபொருட்கள் அனைத்து குடும்பங்களும் மற்றும் எரிபொருள் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்புவதுக்கும், மீனவர்களுக்கு சரியான முறையில் எரிபொருள் வழங்கல் தொடர்பாகவும் கலந்துரையாடி மக்களை ஓரளலாவது சிரமத்திலிருந்து விடுவிப்பதில் பேசுவதற்கான முன்னெடுப்புக்களை மேற்கொள்வதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY