பயிர்களைச் சேர்ந்து நடுவோம்

சமூக விஞ்ஞான ஆய்வு மையமும், வலி கிழக்கு பிரதேச சபை தவிசாளரும் இணைந்து பயிரிடுவோம், உயிர்வாழ்வோம் எனும் திட்டத்தை வலி கிழக்கு பிரதேச சபைக்கு உட்பட்ட உரும்பிராய் கிழக்கில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 5:00 மணியளவில் ஆரம்பித்து வைத்தனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் ஏற்படக் கூடிய உணவு பஞ்சத்தை தடுக்கும் முகமாக வீடுகளில் தோட்ட செய்கையை ஊக்குவிக்கும் நடவடிக்கையாக மரவள்ளி தடிகள், மற்றும் விதை தானியங்கள் என்பன ஒவ்வொருவரது வீடுகளிலும் நாட்டி வைக்கப்பட்டதுடன் வீட்டுத் தோட்டம் தொடர்பான ஆலோசனைகளும் வழங்கி வைக்கப்பட்டன.

உரும்பிராய் கிழக்கு காளி கோவிலில் வலி கிழக்கு பிரதேச சபை தவிசாளர் தி. நிரோஸ் தலமையில் ஆலய வழிபாட்டுடன் ஆரம்பமான நிகழ்வில் சமூக விஞ்ஞான ஆய்வு மைய இயக்குநர் அரசியல் ஆய்வாளர் சி.அ. யோதிலிங்கம், துணை இயக்குநர் மருத்துவர் க. பவணந்தி, மற்றும் சமூக விஞ்ஞான ஆய்வுமைய செயற்பாட்டாளர்களான ஆசிரியர்கள் திரு. பகீரதன், திருமதி கௌரி, திரு. கசேந்திரன் சமூக செயற்பாட்டாளர் திருமதி வந்தனா உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

பயிர்களைச் சேர்ந்து நடுவோம்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY