நள்ளிரவில் இரகசியமாக வினியோகிக்கப்பட்ட எரிபொருள்

யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை துறைமுகம் அருகிலுள்ள கொட்டடி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நள்ளிரவில் எரிபொருள் விநியோகிக்கப்பட்ட வேளை பொதுமக்களால் சுற்றிவளைக்கப்பட்டு போலீசார் வரவழைக்கப்பட்ட பின்னர் போலீசாரால் நால்வர் கைது செய்யப்பட்டு உடனடியாகவே மூவர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். எனினும் போலீசாரால் ஒருவர் மட்டும் பருத்தித்துறை போலீஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

எனினும் அவரை போலீஸ் நிலையத்தில் எச்சரித்து விடுதலை செய்யப்படவுள்ளதாக பருத்தித்துறை போலீஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது;

நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 11:00 மணிக்கு பின்னர் ஐந்து பண முதலைகளின் கிளர்ச்சி வாகனங்கள் மற்றும் கொள்கலன்களில் டீசல் நிரப்பி அனுப்பிக் கொண்டிருந்ததை அறிந்த மக்கள் குறித்த எரிபொருள் நிலையத்தை முற்றுகையிடப்பட்டு போலீசார் வரவழைக்கப்பட்டு நால்வர் கைது செய்யப்பட்ட நிலையில் மூவர் உடனடியாக விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் குறித்த எரிபொருள் நிரப்பு நிலைய சம்பவங்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகளோ அல்லது சட்ட நடவடிக்கைகளோ இடம் பெறாமல் தடுக்கும் வகையில் அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தற்போது ஏழு கொள்கலன் டீசலும் பருத்தித்துறை போலீசாரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளது.

நள்ளிரவில் இரகசியமாக வினியோகிக்கப்பட்ட எரிபொருள்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY