
posted 19th June 2022
இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள்களுக்கான பற்றாக்குறையும், தட்டுப்பாடும் பொது மக்களுக்குப் பல்வேறு வழிகளிலும் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னொருபோதும் ஏற்படாதவகையில் எரிபொருளுக்கான நீண்ட கியூவரிசைகளில் காத்து நின்று மக்கள் பெரும் அவலங்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.
அதேவேளை அரச நிருவாக, திணைக்கள சேவைகளிலும் குறித்த எரிபொருள் தாட்டுப்பாடு தாக்கத்தை ஏற்படுத்தியும் வருகின்றது.
இந்த நிலமையின் காரணமாகவும், குறித்த எரிபொருள் நெருக்கடி காரணமாகவும் உடனடியாக செயற்படும் வண்ணம் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் மத்தியஸ்த சபைகளின் அமர்வுகள் இருவாரங்களுக்குத் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இலங்கை நீதி அமைச்சின் கீழான மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுவினால் நாடளாவிய ரீதியில், பிரதேச செயலக ரீதியாக மத்தியஸ்த சபைகள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதுடன்,
மக்களிடையே ஏற்படும் பிணக்குகளை சமாதானமான முறையில் தீர்த்து வைப்பதிலும் பெரும் பங்காற்றியும் வருகின்றன.
இத்தகைய சேவையாற்றிவரும் மத்தியஸ்த சபைகளின் அமர்வுகளே எரிபொருள் நெருக்கடிகாரணமாக, மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுவின் செயலாளரது அறிவுறுத்தலுக்கமைய இருவாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இதற்கு அமையவே மட்டக்களப்பு, அம்பாறை மாவ்டங்களிலும் மத்தியஸ்த சபைகளின் அமர்வுகள் தற்காலிகமாக இருவாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
மேலும் நிந்தவூர் பிரதேசத்திற்கான மத்தியஸ்த சபையின் அமர்வு இன்று (ஞாயிறு) இடம்பெற்றபோது, எதிர்வரும் 26 ஆம் மற்றும் ஜுலை 3 ஆம் திகதிகளில் சபை அமர்வுகள் இடம்பெறாது ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சபைத் தவிசாளர் பல்கீஸ் அப்துல் மஜீத் அறிவித்துள்ளார்.
ஏற்கனவே, ஒரு மாதத்தில் நான்கு (வாரநாள்) தினங்கள் இடம்பெற்று வந்த மத்தியஸ்த சபைகளின் அமர்வுகள் நாட்டின் பொருளாதார நெருக்கடி காரணமாக மாதத்தில் இரு அமர்வுகளாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY