
posted 7th June 2022
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகமும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும் இணைந்து ஒழுங்கு செய்துள்ள ஜப்பான் மற்றும் கொரிய மொழிகள் பயிற்சிப் பாட நெறி சாய்ந்தமருது இளைஞர் தொழிற் பயிற்சி நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (07) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.
நிலையப் பொறுப்பதிகாரி எம்.ரி.எம். ஹாரூன் தலைமையில் இடம்பெற்ற ஆரம்ப நிகழ்வில் முறையே ஜப்பான், கொரிய மொழி விரிவுரையாளர்களான பி.எம். நளீம் மொஹிடீன், வை.பி. நப்பாஸ் ஆகியோர் கலந்து கொண்டு குறித்த மொழிக்கற்கை நெறிகள் தொடர்பிலான அறிமுகம் மற்றும் அடிப்படை அம்சங்கள் தொடர்பில் விளக்கமளித்தனர்.
03 மாதங்களைக் கொண்ட இப்பயிற்சிப் பாட நெறிகளை பயில்வதற்காக புதிய பயிலுனர் தொகுதிக்கு தெரிவு செய்யப்பட அறுபதுக்கு மேற்பட்டோர் இதில் பங்குபற்றியிருந்தனர்.
குறித்த பாட நெறிகளுக்கு அனுமதி பெற்றுள்ள பயிலுனர்களுக்கு இதன்போது நிலையப் பொறுப்பதிகாரியினால் ஆலோசனை, அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதுடன் பயிற்சி நெறியை முறையாக பூர்த்தி செய்து, பரீட்சைகளில் சித்தியடைகின்ற பயிலுனர்களுக்கு மாத்திரமே சான்றிதழ் வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.
அரசாங்க அனுசரணையுடன் ஜப்பான் மற்றும் கொரிய நாடுகளுக்கு தொழில் வாய்ப்புக்காக தெரிவு செய்யப்படுவோர் கட்டாயம் அந்நாடுகளின் மொழிகளைப் பயின்று, சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY