
posted 26th June 2022
கிளிநொச்சி மாவட்ட சுகாதார ஊழியர்கள் நேற்று சனிக்கிழமை 25ஆம் திகதி காலை 9.30 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் சுகாதார ஊழியர்களுக்கு எரிபொருள் விநியோகம் மேற்கொள்ளப்பட்ட சமயத்தில் அங்கு சமூகமளித்திருந்த கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ந. சரவணபவன் மீது சிலர் தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவித்து அதற்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.
சுகாதார ஊழியர்களுடன் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் உள்ளவர்கள் மிகமோசமான வார்த்தை பிரயோகங்களை மேற்கொள்கின்றனர், அவமதிக்கும வகையில் நடந்துகொள்கின்றனர். மது போதையில் இருப்பவர்கள் தொழில் அடையாள அட்டையை
பரிசோதிக்கின்றனர். எனவே இவ்வாறான சம்பவங்களை நிறுத்தவேண்டும்.
அத்தோடு சுகாதார ஊழியர்களுக்கு எரிபொருள் வழங்கும் பொருட்டு வெளியிடப்பட்ட சுற்றறிக்கைக்கு அமைவாக எரிபொருள் விநியோகத்தை மேற்கொள்ளவேண்டும், சுகாதார ஊழியர்களுக்கு என கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள எரிபொருள் நிலையத்திற்கு வழங்கப்பட்ட அனுமதியினை நிறுத்தி, கூட்டுறவுச் சங்கத்தின் எரிபொருள் நிலையத்திற்கு மாற்றுமாறும், சுகாதார பணிப்பாளர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு உடன் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் தெரிவித்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையிலிருந்து பேரணியாக மாவட்ட செயலகம் வரை சென்று அங்கு மாவட்ட அரச அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரனிடம் மகஜர் ஒன்றையும் அவர்கள் கையளித்தனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY