காலில் குற்றிய முள்ளு உயிரைக் காவு கொண்டது

காலில் குற்றிய முள்ளு இளைஞனின் உயிரைக் காவு கொண்டது

காலில் முள் குத்தியதாக யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அராலி மேற்கு, வட்டுக்கோட்டையைச் சேர்ந்த தருமராசா மதிகரன் (வயது-28) எனும் இளைஞரே உயிரிழந்துள்ளார்.

கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் காலில் முள் ஒன்று குத்தியதாகவும், அவ்விடத்தில் வலி ஏற்பட்டுள்ளதாகத் கூறி வைத்தியசாலையில் சிகிச்சை பெற வந்த நிலையில், விடுதியில் சேர்க்கப்பட்டு இளைஞருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

அந்நிலையில் இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.


ஒரு கிலோ சீனி 50 ரூபாவால் அதிகரிக்கலாம்

தாய்லாந்தில் இருந்து சீனி இறக்குமதி செய்ய நேரிட்டால் சந்தையில் சீனியின் விலை மேலும் அதிகரிக்கக்கூடும் என சீனி இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதன்படி, சீனி கிலோ ஒன்றின் விலை 50 ரூபாவால் அதிகரிக்கக்கூடும் என இறக்குமதியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சீனி கிலோகிராம் ஒன்று தற்போது சந்தையில் 265 ரூபா முதல் 300 ரூபாவுக்கு இடைப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுகின்றது.

இந்தியாவினால் சர்வதேச சந்தைக்கு சீனி உள்ளிட்ட மேலும் சில அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதி நிறுத்தப்பட்டமை காரணமாகவே சீனியின் விலை அதிகரித்துள்ளது.

உக்ரைன் உள்ளிட்ட மேலும் சில நெருக்கடிகள் காரணமாக இந்தியாவினால் சீனி, தானியங்கள் உள்ளிட்ட சில பொருட்களின் இறக்குமதி நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும், பங்களாதேஷ், மியன்மார், மாலைதீவு உள்ளிட்ட நாடுகள் ராஜதந்திர ரீதியாக மேற்கொண்ட தலையீடு காரணமாக இறக்குமதித் தடை நீக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, அரசாங்கம் ராஜதந்திர ரீதியாக தலையீடு செய்து சீனிக்கான இறக்குமதித் தடையை நீக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என சீனி இறக்குமதியாளர்கள் கோரியுள்ளனர்.

அத்தகைய நடவடிக்கை எடுக்காவிடின் சந்தையில் சீனிக்கான விலை மேலும் அதிகரிக்கக்கூடும் என அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


தனியார் பஸ்களுக்கு டீசல் இல்லாததால் சேவைகள் ஸ்தம்பிதம்

தமது சேவையை தொடர எரிபொருள் வசதி ஏற்படுத்தித் தராவிட்டால், தனியார் பஸ்களுக்கு டீசல் வழங்க மாட்டோம் என வடபிராந்திய போக்குவரத்து சபை ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.

இதனால், கோண்டாவில் இலங்கை போக்குவரத்துச் சபை தலைமைக் காரியாலயத்தின் முன்பாக பதற்றமான நிலைமை தோன்றியது.

தனியார் பஸ்கள், பாடசாலை சேவையில் ஈடுபடும் வாகனங்களுக்கு இலங்கை போக்குவரத்துச் சபை களஞ்சியங்களில் இருந்து எரிபொருளை வழங்கும் திட்டத்தை அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதன்படி நேற்று கோண்டாவிலில் உள்ள வடபிராந்திய போக்குவரத்துச் சபை தலைமைக் காரியாலயத்தில் எரிபொருளை பெற தனியார் வாகனங்கள் வரிசையில் காத்திருந்தன.

மதிய உணவின் பின்னர் எரிபொருள் வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இ.போ.ச ஊழியர்கள் பிரதான வாயிலை அடைத்து, தமது கோரிக்கை நிறைவேறினால் மட்டுமே எரிபொருளை வழங்குவோம் என அறிவித்தனர்.

தனியார் சேவை தொடர எரிபொருளை வழங்கும் அரசு, தமது சேவையை தொடரவும் ஏற்பாடு செய்ய வேண்டுமென அவர்கள் குறிப்பிட்டனர்.



காதலியுடன் கிளிநொச்சியில் காணாமல் போனவர் - கொக்கட்டிச்சோலையில் கண்டுபிடிக்கப்பட்டார்

கிளிநொச்சியில் காணாமல் போன இளைஞர் ஒருவர், மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி, கனகாம்பிகைக்குளம் பகுதியைச் சேர்ந்த உதயராஜ் அம்சவர்தன் என்பவர் கடந்த 16 ஆம் திகதி காணாமல் போயிருந்ததாக கிளிநொச்சி பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்த இளைஞன் கிளிநொச்சியில் அமைந்துள்ள தொழிற்பயிற்சி நிலையம் ஒன்றுக்கு சென்றிருந்த நிலையிலேயே காணாமல் போயிருந்தார் என குறித்த இளைஞரின் தாயாரினால் முறைப்பாடு செய்யப்பட்டது.

குறித்த இளைஞன் மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கற்சேனை பகுதியில் அப்பகுதி இராணுவத்தினரால் அடையாளம் காணப்பட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

அவர் தனது காதலியுடன் அங்கு சென்றுள்ளதாக இதன்போது தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்

காலில் குற்றிய முள்ளு உயிரைக் காவு கொண்டது

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY