
posted 17th June 2022
நாடளாவிய ரீதியில் எரிபொருளுக்கு ஏற்பட்டுள்ள உக்கிரத் தட்டுப்பாடு காரணமாக பொது மக்கள் இரவு பகலாக பெரும் அசௌகரியங்களுக்குள்ளாகி வருகின்றனர்.
நாட்டின் பல பாகங்களிலும் எரிபொருள் பெற்றுக் கொள்வதற்காக எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னால் பெருமளவில் மக்கள் திரண்டு நீண்ட வரிசைகள் காணப்படுவதுடன் பல இடங்களிலும் ஆர்ப்பாட்டங்களிலும் வீதி மறியல் போராட்டங்களிலும் ஈடுபடுவது வழக்கமாகியுள்ளது.
இந்திய உதவித் திட்டத்தின் கீழான எரிபொருள் ஏற்றிய கடைசிக் கப்பல் இன்று வருவதாக தெரிவிக்கப்பட்ட தகவல் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியதுடன் எரிபொருள் முற்றாக தடைப்படுமோ என்ற சந்தேகங்களையும் கிளப்பியுள்ளது.
எனினும், மேலும் பெற்றோல் எரிபொருள்களுடன் கூடிய கப்பல்கள் வரயிருப்பதாக நம்பிக்கையான தகவல்கள் பின்னர் வெளியிடப்பட்டதையடுத்து மக்கள் சிறிது ஆறுதலடைந்துள்ளனர்.
இதேவேளை இன்று பாணந்துறையில் எரிபொருள் வரிசையில் நின்ற ஒருவர் திடீர் மரணமடைந்துள்ள சம்பவமும் இடம்பெற்றுள்ளது.
மேலும் அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களிலும் மூடப்பட்ட நிலையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்கள் சிலவற்றிற்கு முன்னாலும் கியூ வரிசைகளில் மக்கள் திரண்டிருப்பதை காணக்கூடியதாகிவிருந்தது.
குறிப்பாக நேற்று இரவு முதல் இயந்திர கோளாறு காரணமாக நிந்தவூரில் உள்ள பிரபல எரிபொருள் நிரப்பு நிலையம் தற்காலிகமாக அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்த போதிலும், குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தை அண்மித்து கியூ வரிசைகளில் அதிகாலையிலிருந்து மக்கள் பெற்றோல் எரிபொருளைப் பெறுவதற்காக காத்திருந்ததுடன் பெருமளவு ஆட்டோக்களும் தனிக் கியூ வரிசைகளில் காணப்பட்டன.
ஆனால் நேற்று (16) மாலை வரையும் அந்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெற்றோல் விநியோகிக்கப்படாத ஏமாற்றத்துடன் மக்கள் திரும்பியதையும் அவதானிக்க முடிந்தது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY