
posted 2nd June 2022
கல்முனை, இஸ்லாமபாத் பகுதியிலுள்ள பெண்கள், சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் இருந்து காணாமல் போன சிறுமி, மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வாழைச்சேனை பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
நிந்தவூரை சேர்ந்த குறித்த 16 வயதுச் சிறுமி, கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் சிலரால் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டதையடுத்து நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் மேற்படி பாடசாலையில் ஒரு வருட காலமாக தங்கவைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (29) மதியம் திடீரென காணமால் போன இச்சிறுமியை கண்டுபிடிப்பதற்காக கல்முனை பொலிஸ் விசேட குழுவினர் மேற்கொண்ட தீவிர தேடுதல் நடவடிக்கையின்போது நேற்று முன்தினம் வாழைச்சேனை பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டு, மீட்கப்பட்டுள்ளார்.
சிறுமியிடம் மேற்கொள்ளப்பட்ட பொலிஸ் விசாரணையின்போது தனது சுயவிருப்பத்தின் பேரிலேயே குறித்த பாடசாலையில் இருந்து வெளியேறியதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY