ஏழைத் தாயின் ஆக்கிரமிக்கப்பட்ட காணியை மீட்டெடுத்த பா.உ.  முஷ‌ர்ர‌ப் - பாராட்டும் ஐக்கிய காங்கிரஸ்

ஏழைத்தாய் ஒருவ‌ரின் ஆகிர‌மிக்க‌ப்ப‌ட்ட‌ வ‌ய‌ல் காணியை நீதி ம‌ன்ற‌ம் மூல‌ம் மீள‌ பெற்றுக்கொடுத்த‌ பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ர் முஷ‌ர்ர‌ப் அவ‌ர்க‌ளுக்கு ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி, அம்பாறை மாவ‌ட்ட‌ முஸ்லிம் ச‌மூக‌ம் சார்பில் த‌ன‌து ந‌ன்றியை தெரிவித்துள்ள‌து.

இது ப‌ற்றி க‌ட்சித்த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் அவ‌ர்க‌ளால் பா. உ முஷ‌ர்ர‌புக்கு எழுதிய‌ க‌டித‌த்தில் தெரிவித்துள்ள‌தாவ‌து,

ச‌ம்மாந்துறை வ‌ள‌த்தாப்பிட்டியில் உள்ள‌ க‌ர‌ங்காவ‌ட்டை என்ற‌ நூற்றுக்க‌ன‌க்கான‌ ஏக்க‌ர் கொண்ட‌ காணிக‌ளை கொண்ட‌ பிர‌தேச‌ம் அம்பாறைக்குள் அட‌ங்குவ‌தாக‌ 2001ம் ஆண்டு ச‌ந்திரிக்காவின் ஆட்சியில் க‌ள்ள‌த்த‌ன‌மாக‌ வ‌ர்த்த‌மாணி மூல‌ம் பிர‌சுரிக்க‌ப்ப‌ட்ட‌து.

அப்போது ர‌வூப் ஹ‌க்கீம் த‌லைமையிலான‌ முஸ்லிம் காங்கிர‌ஸ் ம‌ட்டுமே அம்பாறை மாவ‌ட்ட‌ ம‌க்க‌ளின் பிர‌திநிதியாக‌ இருந்தும் இத‌ற்கெதிராக‌ எந்த‌ ந‌ட‌வ‌டிக்கையும் எடுக்க‌ப்ப‌ட‌வில்லை.

அத‌ன் பின் 2013ம் ஆண்டு ம‌ஹிந்த‌ ஆட்சியின் போது தெய‌ட்ட‌ கிருள்ள‌ என்ற‌ விழாவின் போது வாக‌ன‌ த‌ரிப்பிட‌மாக‌ பாவிக்க‌வென‌ இக்காணிக‌ள் அர‌சால் வாட‌கைக்கு பெற‌ப்ப‌ட்ட‌ன‌. ஆனாலும் பின்ன‌ர் அக்காணிக‌ள் உரிய‌வ‌ர்க‌ளிட‌ம் திருப்பி வ‌ழ‌ங்க‌ப்ப‌டாம‌ல் கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாக‌ பேரின‌வாதிக‌ளின் ஆக்கிர‌மிப்புக்குள்ளான‌து.

அதில் அப்ப‌ம் சுட்டு வாழும் ஏழைத்தாயின் நான்கு ஏக்க‌ர் காணியும் இருந்த‌து. இத‌னை மீட்க‌ முடியாத‌ நிலையில் ப‌ல‌ரிட‌ம் முறைப்பாடுக‌ள் செய்தும் எதுவும் ந‌ட‌க்க‌வில்லை.

இந்நிலையை க‌ண்ட‌றிந்த‌ பா. உ. முஷ‌ர்ர‌ப் அவ‌ர்க‌ள் உட‌ன‌டியாக‌ இதில் த‌லையிட்டு இந்த‌ அநீதிக்கெதிராக‌ நீதி ம‌ன்ற‌ம் சென்று த‌ன் செல‌வில் வாதாடி அத்தாயின் காணியை திருப்பி வ‌ழ‌ங்கும்ப‌டியான‌ நீதிம‌ன்ற‌ உத்த‌ர‌வை பெற்றுள்ள‌மை மிக‌வும் பாராட்டுக்குரிய‌ விட‌ய‌ம் என்ப‌துட‌ன் நாட்டில் நீதித்த‌ன்மையின் நேர்மை ப‌ற்றிய‌ திருப்தியையும் த‌ருகிற‌து.

அம்பாறை மாவ‌ட்ட‌த்தில் எத்த‌னையோ எம்பீக்க‌ள் இருந்த‌ நிலையில் ப‌ல‌ முஸ்லிம் க‌ட்சிக‌ளின் த‌லைவ‌ர்க‌ள் அமைச்ச‌ர‌வை அந்த‌ஸ்த்துள்ள‌ அமைச்ச‌ர்க‌ளாக‌ இருந்தும் தீர்க்க‌ முடியாம‌ல் போன‌ இவ்விட‌ய‌த்தை ஒரு பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ர் என்ற‌ ஒரேயொரு அதிகார‌த்தை வைத்து பாடுப‌ட்ட‌ ச‌கோத‌ரர் முஷ‌ர்ர‌பின் பெய‌ர் வ‌ர‌லாற்றில் பொறிய‌ப்ப‌ட‌ வேண்டிய‌ ஒன்றாகும்.

ஏழைத் தாயின் ஆக்கிரமிக்கப்பட்ட காணியை மீட்டெடுத்த பா.உ.  முஷ‌ர்ர‌ப் - பாராட்டும் ஐக்கிய காங்கிரஸ்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY