
posted 28th June 2022
தவறு செய்பவர்கள் பற்றி ஊடகவியலாளர் வெளிக்கொணரும்போது, தவறு செய்பவர்கள் முதலில் போடும் முதலீடு ஊடகவியலாரை அச்சுறுத்தல் ஆகும். ஊடகவியலாளர்களை தாக்கினால் பின்விளைவு பெரும் அபாயமாக இருக்கும் என உணர்வுகளும் உண்டு.
இலங்கையில் நிலவி வரும் பொருளாதார சிக்கலுடன் ஊடகத்துறையினர் குறிப்பாக வன்னி ஊடகவியலாளர்கள் பொருளாதார கஷ்டத்துடன் அவர்களின் தொழில் ரீதியிலும் மிகவும் பாதிப்பு அடைந்து வருவதைக் கவனத்தில் எடுத்துக் கொண்ட 'மெசிடோ' நிறுவனமானது தெரிந்தெடுக்கப்பட்ட மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 24 ஊடகவியலாளர்களுக்கு மூன்று தினங்கள் வதிவிட பயிற்சிகளும் அத்துடன் இவர்கள் மன அமைதியுடன் இருந்திடும் செயல் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
திருகோணமலையில் சனிக்கிழமை (25.06.2022) தொடக்கம் திங்கள் கிழமை (27.06.2022) வரை மன்னார் 'மெசிடோ' நிறுவனத்தின் இணைப்பாளர் யூட்சன் பிகிராடோ தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வை ஆரம்பித்து வைத்து தெரிவித்ததாவது;
மேற்கூறப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்களாகிய நீங்கள் பல சவால்களுக்கு மத்தியில் உங்கள் ஊடகத் தொழிலை மேற்கொண்டு வருகின்றீர்கள். அதுவும் இக்காலக்கட்டத்தில் உங்கள் ஊடகத் தொழிலை முன்னெடுப்பதில் நீங்கள் பல சவால்களை சந்தித்து வருகின்றீர்கள். போக்குவரத்து கஷ்டம் மறுபுறம் பொருளாதார சிக்கல் அதிலும் உங்கள் தொழிலால் நீங்கள் சந்தித்துவரும் சுமைகளும், மன உலைச்சல்களும் அதிகரித்து வருவதை உணர்ந்து இந்த மூன்று தினங்களுக்காவது நீங்கள் மன அமைதியுடனும், உங்கள் ஊடக நண்பர்களுடன் உரையாடி மன மகிழ்ச்சியுடன் இருக்கவுமே இந்த ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டதுக்கான காரணம் என தெரிவித்தார்.
இங்கு இவ் ஊடகவியலாளர்களுக்கு நடாத்தப்பட்ட பாசறையில் இரு தினங்களாக வளவாளராக செயல்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர் ருக்கி பெர்னாண்டோ கருத்து தெரிவிக்கையில்;
ஊடகத்துறையினர் பல சவால்களை சந்தித்து வருகின்றனர். ஆனால் ஊடகவியலாளர்களின் பலம் குறைந்து செல்லகின்றது. இது ஊடகவியலார்களுக்கு மட்டுமல்ல ஏனைய அரசு சார்பற்ற நிறுவனங்களுக்கும் உண்டு.
நானும் ஒரு ஊடகத்துறையைச் சார்ந்தவன். நாம் இக்காலக்கட்டத்தில் ஊடகத்தின் செயல்பாட்டை மிக நுணுக்கமாக பார்க்க வேண்டும். நாம் இங்கே எமது அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் போது இது அனைவருக்கும் பகிர்ந்து கொள்ள முடியும். இன்றைய சூழலில் எமது பாதுகாப்பு பற்றியும் நாம் சிந்திக்க வேண்டும் நாம் எமது பாதுகாப்பை எப்படி உறுதிப்படுத்தப்பட வேண்டும் என பார்க்க வேண்டும். இவற்றை பார்க்கும் போது எமது தனிப்பட்ட பாதுகாப்பு மட்டும் அல்ல மாறாக இது எமக்கு தகவல் தருபவரின் ஏனைய ஊடகவியலாளர்கள், உதவி செய்பவர்கள் என்பவர்களும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என நாம் சிந்தித்து செயல்பட வேண்டும். அத்துடன் எமது நிறுவனத்தையும் பாதுகாப்புக்கு உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
நாம் இவ்விடத்தில் மூன்று விதமாக சிந்திக்க முடியும். பாதுகாப்பு அடுத்து எவ்வாறு புலனாய்வு மூலம் செய்திகள் சேகரிப்பது, அடுத்து ஐக்கிய நாடுகளுக்கும் ஊடகத்திற்கும் உள்ள தொடர்பு இவற்றுடன் எமது அலுவல்களை பற்றி பகிர்ந்து வருவது தொடர்பாகவும் ஆராய உள்ளோம்.
ஊடகவியலாளர்கள் எப்பொழுதும் கூர்ந்து கவனித்து செயல்பட வேண்டியவர்கள்.
சேகரிக்கப்படும் ஊடக செய்திகள் வகைப்படுத்தி இருக்க வேண்டும். இவற்றை நம்பிக்கை உள்ளவர்களிடம் பகிர்ந்து கொள்வது நலம்.
ஒரு ஊடகவியலாளரின் பாதுகாப்பு விடயத்தை நோக்கும்போது, முதலாவது அச்சுறுத்தல்; இது உடல், உள, பொருட்கள் அச்சுறுத்தலாக இருக்கலாம்.
இந்த அச்சுறுத்தல் இடம் பெறாவிட்டாலும், இது ஒரு மன உளைச்சலையும் பயத்தையும் எமக்கு உருவாக்கலாம்.
ஒரு ஊடகவியலாளரை அடிப்பேன் எனக்கூறி அச்சுறுத்துபவர், அடிப்பதை விட அச்சுறுத்தலானது ஒரு ஊடகவியலாளரை பாதிப்படையச் செய்யும் என்பது நமக்குத் தெரியும்.
தவறு செய்பவர்கள் பற்றி ஊடகவியலாளர் வெளிக்கொணரும்போது முதலில் போடும் முதலீடு ஊடகவியலாரை அச்சுறுத்தல் ஆகும். ஊடகவியலாளர்களை தாக்கினால் பின்விளைவு பெரும் அபாயமாக இருக்கும் என உணர்வுகளும் உண்டு.
ஊடகவியலாளர் எமக்கு அச்சுறுத்தல்கள் வந்தாலும் நாம் முன் எச்சரிக்கையாக இருந்து செயல்பட வேண்டும். அத்துடன், அச்சுறுத்தலுக்கு அஞ்சாது இருந்து செயல்படும் மனத் தைரியத்தடன் இருக்க வேண்டும்.
அதேசமயம், எம்மை பாதுகாத்துக் கொள்ளவும் நாம் ஈடுபட வேண்டும். ஊடகத்தினர் புலன் விசாரணை மூலம் எவ்வாறு தகவல் பெற வேண்டும் என்பதும் இங்கே ஆராயப்பட்டது.
இன்று நாட்டில் கடத்தப்படும் போதைப் பொருட்கள் ஒரு முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என ஊடகவியலாளர்கள் முயற்சிக்கின்ற போதும் இது வெற்றியளிக்காமல் விடலாம். ஏனென்றால், இதில் அரசியல்வாதிகள், பாதுகாப்புத் தரப்பினரின் பங்கும் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.
இவற்றை ஊடகவியலாளர்கள் நிறுத்துவதற்கு எடுக்கும் முயற்சி வெற்றி அளிக்காவிட்டாலும் குறைப்பதில் ஒரு வாய்ப்பு இருக்கின்றது.
ஒரு பொதுமகன் போதைப்பொருள் கடத்துவது செய்தி. பொதுமக்கள் மத்தியில் ஆச்சரியத்தை உருவாக்காவிட்டாலும், அரசியல்வாதிகள், பாதுகாப்பு படையினர் இவ்வாறான குற்றங்களில் ஈடுபடுவதுபற்றி வெளிக் கொணரும்போது மக்கள் ஆர்வமுடன் வாசிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஆகவே, இவ்வாறான குற்றச் செயல்கள் நடைபெறும் பொழுது அதை ஒரு ஊடகவியலாளரால் தடுக்க முடியாவிட்டாலும், அவர் குற்றங்களை குறைப்பதில் ஊடகவியலாளரால் முடியும் என தெரிவிக்கப்பட்டது.
இப் பயிச்சிப் பட்டறையில் ஊடகத்துறையின் பல்கலைக்கழக விரிவிரையாளர் திருமதி டினித்தி ரத்னாயக்காவும் கலந்து கொண்டு ஊடகவியலாளர் எவ்வாறு ஒரு செய்தியை புலனாய்வு செய்து அறிக்கையிடுவது என்பது பற்றியும் இங்கு தெளிவுப்படுத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY