
posted 8th June 2022
தமிழ்நாடு திருச்சி ஈழத்தமிழர் சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை பத்தொன்பதாவது நாளாக உண்ணாவிரத போராட்டம் தொடர்கிறது.
இந்நிலையில் திருச்சி சிறப்பு முகாமிலிருந்து திருச்சி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பப்பட்டவர்கள் அனைவரும் நேற்றிரவு முதல் அவசர சிகிச்சை பிரிவிலிருந்து சாதாரண விடுதிக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
எனினும் அவர்கள் தங்களுடைய உண்ணாவிரத போராட்டத்தை கைவிடவில்லை.
இந்நிலையில் இதுவரை தமிழக முதலமைச்சர் சார்பாகவோ அல்லது அரசு அதிகாரிகள் சார்பாகவோ போராட்டத்தில் ஈடுபடுபவர்களுடன் எந்தவித பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது
இன்று 19 வது நாளாக போராட்டம் தொடரவதால் அவர்களின் உறவுகள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)