
posted 14th June 2022
திருகோணமலை மாவட்டத்தின் ஈச்சிலம்பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட உப்பூறல், சீனன்வெளி ஆகிய கிராமங்களில் இன்று செவ்வாய்க்கிழமை மாலை 4.30மணியளவில் சிறிய அளவிலான சூறாவளிக் காற்றின் காரணமாக 29 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் மரங்கள் முறிந்து விழுந்தமையினால் உந்துருளி ஒன்றும் சேதமடைந்துள்ளது.
பாரிய இரைச்சலுடன் சூறாவளித் தாக்கம் ஆரம்பித்த போது மக்கள் வீடுகளை விட்டு வெளியேறியமையினால் எவ்விதமான உயிர்ச்சேதங்களோ காயங்களோ ஏற்படவில்லை. மேலும் 30 க்கு மேற்பட்ட படகுகளும் சேதமாகியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY