
posted 5th June 2022
யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் நேற்று சனிக்கிழமை நண்பகல் இடம்பெற்ற வீதி விபத்தில் சிக்கிய இந்து மதப் பெண் துறவியான செல்வி ஓங்கார ரூபி (வயது 70) சண்முகநாதன் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்துச் சம்பவம், பருத்தித்துறை பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் பயணித்த அவர் திடீரென நல்லூர் பிரதேச செயலகத்துக்குச் செல்லும் வீதிக்கு மோட்டார் சைக்கிளை திரும்பிய போது பின்னால் வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மண்டைதீவு 7ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த ஓங்காரரூபி, வேலன் சுவாமிகளின் ஆதீனத்தில் இருந்தவர் என்று தெரியவந்துள்ளது.
அவரின் மரணம் தொடர்பிலான மரண விசாரணையை யாழ். போதனா வைத்தியசாலையின் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)