அனுமதியின்றி விறகு ஏற்றி வந்தவர்கள் கைது!

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆனையிரவு பகுதியில் அனுமதியின்றி விறகு ஏற்றி வந்தவர்கள் கைது!

கிளிநொச்சி மாவட்ட பொறுப்பதிகாரி சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் மெதவல அவர்களுக்கு கிடைத்த தகவலையடுத்து உதவி பொலிஸ் அத்தியட்சகர் இக்னு அஷார் அவர்களின் தலைமையில் மாவட்ட மது ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி குமாரசிங்க உட்பட அவரின் குழுவினரினால் ஆனையிரவு‌ வீதித்தடையில் வைத்து அனுமதியின்றி ஏற்றி வரப்பட்ட விறகு லொறிகள் 06ம் பூநகரி சங்குப்பிட்டி பால வீதி தடையில் 02 லொறிகளுமாக மொத்தம் 08லொறிகள் 08சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒதுக்கப்பட்ட காடுகளில் இருந்து பச்சை மரங்களை வெட்டி அனுமதி பத்திரம் இன்றி ஏற்றி வந்த குற்றச்சாட்டிலேயே கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இவர்கள் நாளை கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்திருந்தனர்.

அனுமதியின்றி விறகு ஏற்றி வந்தவர்கள் கைது!

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)