Tamil News | Thaenaaram | Obituary Notices | Remembrance Notices | Anniversary Notices | Advertisements |  Medical Articles |

உறவுகளின் துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£1.00 Was £84.00

ரணில் அதிகாரப் பகிர்வு பற்றி பேசி யாரை ஏமாற்றுகின்றார் - சபா குகதாஸ்

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவி ஏற்ற பின்னர் ஜனவரிக்கு தீர்வு வரும் சுதந்திர தினத்திற்கு தீர்வு வரும் என கூறியவர் பின்னர் தமிழ்க் கட்சிகளுக்கு இடையிலான சந்திப்பில் ஒற்றையாட்சி அரசியல் அமைப்பில் உள்ள பொலிஸ் அதிகாரத்தை தரமாட்டேன் என பாராளுமன்ற முடிவுகள் இல்லாமல் தன்னிச்சையாக அறிவித்தவர் சம்பந்தன் ஐயா இறந்ததும் அதிகாரப் பகிர்வு பற்றி பேசியுள்ளார் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

இன்று (03) புதன்கிழமை அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

சம்பந்தன் ஐயா உயிருடன் இருக்கும் போது சர்வாதிகார போக்கில் மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரம் தர முடியாது என பகீரங்கமாக அறிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சம்பந்தன் இறந்ததும் அதிகாரப் பகிர்வு பற்றி பேசுவது தமிழ் மக்களை ஏமாற்றவா? அல்லது சம்பந்தனின் இறப்பிலும் அரசியலா? என்ற கேள்விதான் எழுகின்றது.

விரும்பியோ விரும்பாமலோ சிங்கள ஆட்சியாளர்களின் வாயில் இந்த நாட்டில் புரையோடிப் போய் உள்ள தேசிய இனப்பிரச்சினைக்கு அதிகாரப் பகிர்வு தான் தீர்வு என்ற உண்மை உச்சரிக்கப்படுகின்றது என குறிப்பிடப்பட்டுள்ளது.

எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

Tamil News | Thaenaaram | Obituary Notices | Remembrance Notices | Anniversary Notices | Advertisements |  Medical Articles |

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)