தொடரும் பயங்கரவாத தடைச்சட்டம்

உறவுகளின் துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£1.00 Was £84.00

தொடரும் பயங்கரவாத தடைச்சட்டம்

பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவதை முடிவுக்கு கொண்டுவருவதாக உறுதியளித்துள்ள போதிலும் இலங்கை அதிகாரிகள் தொடர்ந்தும் பயங்கரவாத தடைச்சட்டத்தினை தாங்கள் எதிராளிகள் என கருதுபவர்கள் மற்றும் சிறுபான்மை சமூகத்தினருக்கு எதிராக பயன்படுத்துகின்றனர் என சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

இலங்கை அதிகாரிகள் தாங்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு உரிய ஆதாரங்களை முன்வைக்காதபோதிலும் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக பயங்கரவாத தடைச் சட்டத்தை பயன்படுத்துகின்றனர் என மனித உரிமை கண்காணிப்பகம் கூறியுள்ளது.

கண்மூடித்தனமாக தடுத்துவைத்தல் மற்றும் சித்திரவதைகள் காரணமாக சிலர் பல வருட காலமாக பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை, சிலர் வழக்குகள் கைவிடப்பட்ட பின்னரும் ஒடுக்குமுறைகளை எதிர்கொள்கின்றனர் என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டம் எனப்படும் சட்டம், கைதானவர்களை நீண்டகாலத்துக்கு அதிகாரிகளின் அனுமதியுடன் தடுத்துவைப்பதற்கான ஏற்பாடுகளைக் கொண்டுள்ளது. நீதிமன்றத்தின் கண்காணிப்பின்றி இதனைச் செய்யலாம் என குறிப்பிட்டுள்ள சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம், இந்த சட்டம், சித்திரவதைக்கு எதிரான போதிய பாதுகாப்பின்மைகளைக் கொண்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளது.

2022 இல் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் ஆற்றிய உரையில் அப்போதைய வெளிவிவகார அமைச்சர் பயங்கரவாத தடைச் சட்டத்தை பயன்படுத்துவதை நிறுத்துவதாக உறுதிமொழி வழங்கினார். எனினும் ஜனாதிபதி விக்கிரமசிங்கவின் ஆட்சியின் கீழ் பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்ந்தும் பயன்படுத்தப்படுகின்றது எனவும் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டம் பரந்துபட்ட அளவில் பயன்படுத்தப்படுவதால் சிவில் சமூகம் அரசாங்க மட்டத்திலான ஊழல் குறித்து ஆராய முடியாத நிலையில் இருப்பதாக 2023 செப்ரெம்பரில் சர்வதேச நாணய நிதியம் தெரிவித்திருந்தது என குறிப்பிட்டுள்ள சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம், பயங்கரவாத தடைச் சட்டத்தினால் ஏற்படும் அச்சநிலை அவ்வாறானது எனவும் குறிப்பிட்டுள்ளது.

இலங்கையின் விரிவான உள்நாட்டு பாதுகாப்பு கட்டமைப்பானது அப்பாவி மக்களை குறிவைப்பதற்காகவும்,விமர்சனங்களில் ஈடுபடுபவர்களை மௌனமாக்குவதற்காகவும், சிறுபான்மை சமூகங்களை இழிவுபடுத்துவதற்காகவும் பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துகின்றது என மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசியாவுக்கான பிரதி இயக்குநர் மீனாக்சி கங்குலி தெரிவித்துள்ளார்.


எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

தொடரும் பயங்கரவாத தடைச்சட்டம்

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

மேலதிக செய்திகள் | Additional News

Mahanadhi - மகாநதி - 12 - 13.03.2026

Mahanadhi - மகாநதி - 12 - 13.03.2026

Read More
Varisu - வாரிசு - 11 - 14.02.2026

Varisu - வாரிசு - 11 - 14.02.2026

Read More
Mahanadhi - மகாநதி - 09 - 11.03.2026

Mahanadhi - மகாநதி - 09 - 11.03.2026

Read More