Tamil News | Thaenaaram | Obituary Notices | Remembrance Notices | Anniversary Notices | Advertisements |  Medical Articles |

உறவுகளின் துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£1.00 Was £84.00

ஜனநாயக வழியில் அணிதிரண்டால் மக்களுக்கு தீர்வு பெற்றுத்தர தயார் அமைச்சர் டக்ளஸ்

பிரச்சினைகளுக்கு வன்முறையற்ற ஜனநாயக முறைப்படி தீர்வினைக் காண மக்கள் அணிதிரளும் பட்சத்தில் தீர்வினை பெற்றுத்தர எப்போதும் தயாராகவே இருக்கின்றேன் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஈவினை கிராமத்தின் வளர்ச்சி அந்த மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக அவர்களின் குரலாக தன்னுடைய பங்களிப்பு எப்போதும் இருக்கும் எனவும் அமைச்சர் கூறினார்.

இளம் விவசாய தொழில் முனைவோர் கிராமமாக ஈவினை கிராமம் தெரிவாகியுள்ள நிலையில் அதன் அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று (20) சனிக்கிழமை காலை நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும், இந்த நிகழ்வில் விவசாய முயற்சியாளர்களுக்கான விவசாய உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன. முன்பதாக இளம் விவசாய முயற்சியாண்மை கிராமமாக யாழ். மாவட்டத்தில் ஈவினைக் கிராமம் அமைச்சரால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் வழிகாட்டலில் இளைஞர்களை தொழில் முயற்சியாளர்களாக மாற்றும் திட்டத்தில் ‘இளம் விவசாய முயற்சியாண்மை கிராமம்' என்ற திட்டம் நாடளாவிய ரீதியில் ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவிலும் ஒரு கிராமம் தெரிவு செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இதனடிப்படையில் அமைச்சரின் பரிந்துரையில் யாழ். மாவட்டத்தில் உடுவில் பிரதேச செயலர் பிரிவில் உள்ள ஈவினை கிராமம் தெரிவு செய்யப்பட்டிருந்தது.

எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

Tamil News | Thaenaaram | Obituary Notices | Remembrance Notices | Anniversary Notices | Advertisements |  Medical Articles |

மேலதிக செய்திகள் | Additional News