
posted 13th July 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
வெங்கலப்பதக்கம் வென்ற வீராங்கனையினை கௌரவிக்கும் நிகழ்வு
இந்தியாவில் கடந்த 18.06.2023 புதுடில்லியில் பகிரங்க சர்வதேச சம்பியன்ஷிப் கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவி செல்வி தவராச சானுயாவை கௌரவிக்கும் நிகழ்வு இன்று புதன்இடம்பெற்றது.
குறித்த சுற்றுப் போட்டியில் 12 நாடுகள் பங்குபெற்றிருந்த நிலையில் மூன்றாம் இடத்தை பெற்று வெற்றி பெற்று வெங்களப் பதக்கத்தினை வென்ற செல்வி தவராச சானுயாவை கொரவிப்பதற்காக இன்றைய தினம் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பதில் தூதுவர் ராம் மகேஸ் கினிநொச்சி மாகாதேவ ஆச்சிரமத்திற்கு சென்றிருந்தார்.
குறித்த மாணவியை நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துடன், சாதனை மாணவியினை மதிப்பளித்தார்.
குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனும் கலந்து கொண்டார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)