
posted 17th July 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
வீதியை திருத்திய இளைஞர்கள்!
வீதியை திருத்துவதற்கு அதிகாரிகள் அசமந்தம் காட்டிய நிலையில் தருமபுரம் இளைஞர்கள் தாமே நிதி திரட்டி வீதியை திருத்தியமைத்தனர்.
பரந்தன் - முல்லைத்தீவு வீதியில் தருமபுரம் பகுதியில் திருத்தப்படும் பாலத்தின் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
இதனால் மக்கள் தற்காலிக பாதையை பயன்படுத்தி வந்தனர். அந்தப் பாதையும் மக்கள் பயணிக்கமுடியாத நிலையில் சேதம் அடைந்துள்ளது. இந்தப் பாலத்தின் அபிவிருத்தி பணிகளை நிறைவு செய்து தருமாறு பல தடவைகள் முறையிட்டபோதும் திருத்தப்படவில்லை.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை தருமபுரம் பகுதி இளைஞர்கள் ஒன்றுதிரண்டு கிரவல் மூலம் தமது சொந்த நிதியில் அந்தப் பாதையை திருத்தியமைத்தனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)