
posted 17th July 2023
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
வழிபாட்டு உரிமை மறுப்புக்கு எதிராக பொலிஸில் முறையீடு
குருந்தூர் மலையில் தமிழ் மக்கள் சைவ வழிபாடுகளை மேற்கொள்ள முடியுமென ஏற்கனவே நீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது.
இந் நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை (14) குருந்தூர்மலையில் சைவ வழிபாடுகளை மேற்கொள்ளச் சென்ற தமிழ் மக்களுடைய வழிபாட்டுரிமை மறுக்கப்பட்டுள்ளதாக முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், சமூக செயற்பாட்டாளர்களான அன்டனி ஜெயநாதன் பீற்றர் இளஞ்செழியன், இரத்தினம் ஜெகதீசன் ஆகியோரால் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அந்தவகையில் தேரர்கள் மற்றும், சில சிங்கள மக்களே இவ்வாறு இடையூறு விளைவித்தனர் என்று குறித்த முறைப்பாட்டில் தாம் குறிப்பிட்டுள்ளனர் என்று முறைப்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
அத்துடன், நீதிமன்ற கட்டளையை நடைமுறைப்படுத்த வேண்டிய பொலிஸார் வழிபாட்டுக்கு இடையூறு விளைவித்தவர்களுக்கு பக்கச்சார்பாக செயல்பட்டனர் என்றும் குறித்த முறைப்பாட்டில் சுட்டிக்காட்டியுள்ளதாக முறைப்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)