
posted 9th July 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் எதிர்ப்பு
காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகத்தினால் மேற்கொள்ளப்படும் பதிவுக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.
கிளிநொச்சி மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகத்தினால் அழைக்கப்பட்டவர்களிற்கான பதிவுகள் நேற்று (08) சனி மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது போனோர் அலுவலக ஆணையாளர் ரி. ஜோகராஜா, கிளிநொச்சி பிராந்திய இணைப்பாளர் நிசாந்தன் ஜீட் பீரிஸ் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடினர்.
இதன்போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தமது ஆதங்கத்தினை வெளியிட்டனர். போராடுவதற்கான உரிமை உள்ளதகவும், பதிவுக்காக வருகை தருபவர்களுக்கு இடையூறு இல்லாமல் செயற்படுமாறும் ஆணையாளர் அவர்களிடம் தெரிவித்தார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)