வர்த்தக மத்தியஸ்தத்தை மேற்கொள்ளவிருக்கும் புகழ்பெற்ற இலங்கை நிறுவனங்கள்

உறவுகளின் துயர் பகிர்வு

பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

வர்த்தக மத்தியஸ்தத்தை மேற்கொள்ளவிருக்கும் புகழ்பெற்ற இலங்கை நிறுவனங்கள்

பிணக்குகளைத் தீர்ப்பதற்காக எல்லா சந்தர்ப்பங்களிலும் வழக்குத் தொடரும் நடைமுறையினைத் தவிர்த்து, பிணக்குகளைத் தீர்ப்பதற்காக வர்த்தக மத்தியஸ்தத்தை மேற்கொள்வதற்கான ஒப்பந்தங்களில் எட்டு இலங்கை வணிகப் பன்கூட்டுத்தாபனங்கள் கைச்சாத்திட்டுள்ளன. வழக்குகள் தேங்குவதைக் குறைப்பதன் ஊடாக இலங்கை நீதிமன்ற கட்டமைப்பினை அதிக வினைத்திறனுடையதாகவும் மற்றும் செயல்விளைவுள்ளதாகவும் மாற்றுவதற்கு இந்நகர்வு உதவி செய்யும்.

சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரமைப்பின் (USAID) Efficient and Effective Justice (EEJ) நடவடிக்கையுடன் செவ்வாயன்று எட்டு நிறுவனங்கள் தனித்தனியாக கையெழுத்திட்ட ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை விருத்திசெய்வதற்கு USAID உதவி செய்தது. நிறுவனங்கள் வர்த்தக மத்தியஸ்தம் தொடர்பான பயிற்சி, சர்வதேச தரத்திலமைந்த மத்தியஸ்தம் மற்றும் வர்த்தக மத்தியஸ்த சேவைகளுடனான நேரடி அனுபவம் ஆகியவற்றினைப் பெற்றுக்கொள்வதற்கு இவ்வொப்பந்தங்கள் உதவுவதுடன் நிறுவனங்கள் தங்களது வர்த்தக ஒப்பந்தங்களில் மத்தியஸ்தம் தொடர்பான ஒரு ஷரத்தினை உள்ளடக்குவதற்கும் அந்நிறுவனங்களை அவை ஊக்குவிக்கின்றன.

வர்த்தக மத்தியஸ்தம் என்பது பிணக்குகளைத் தீர்த்துக் கொள்வதற்கான ஒரு சாத்தியமான மாற்றுப் (ADR) பொறிமுறையாக அமைவதுடன் நாட்டில் முதலீடுகளையும் வர்த்தக அபிவிருத்தியினையும் ஊக்குவிப்பதற்கும் அது உதவி செய்யும்.

நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி பிஎல்சி, துடாவே பிரதர்ஸ் (தனியார்) லிமிடெட், ஏகேகே இன்ஜினியரிங், நவலோக்க கன்ஸ்ட்ரக்ஷன்ஸ், டில்மா சிலோன் டீ நிறுவனம், மாகா இன்ஜினியரிங் (தனியார்) லிமிடெட், ரணசிங்க கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் மற்றும் எம்ஏசி ஹோல்டிங்ஸ் ஆகிய நிறுவனங்கள் கொழும்பிலமைந்துள்ள சினமன் கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்ற ஒரு வைபவத்தில் தமது ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டன.

இப்பங்காண்மைகள் USAID இனால் ஆரம்பிக்கப்பட்ட Efficient and Effective Justice நடவடிக்கையின் கீழ் தொடங்கப்பட்ட வர்த்தக மத்தியஸ்த முன்னோடி நிகழ்ச்சித் திட்டத்தின் அங்கமாகும். அந்நடவடிக்கையானது சர்வதேச மத்தியஸ்த நிபுணர்களால் ஏற்பாடு செய்யப்படும் பயிற்சிப்பட்டறைகள் ஊடாக இந்நிறுவனங்களுக்கு வர்த்தக மத்தியஸ்தம் மற்றும் பிற ADR முறைகளில் பயிற்சி அளிக்கிறது. இலங்கையில் ADR சேவைகளை மேம்படுத்துவதற்காக, மத்தியஸ்த மத்திய நிலையங்களை முகாமை செய்தல் மற்றும் நிர்வகித்தல் போன்ற விடயங்களில் ADR மத்திய நிலையங்களுக்கு இச்செயற்திட்டம் பயிற்சியளிக்கிறது.

“வழக்கு முகாமைத்துவம் மற்றும் நீதிமன்ற முகாமைத்துவம் ஆகிய விடயங்களில் சர்வதேச சிறந்த நடைமுறைகளைப் பின்பற்ற உதவுவதன் மூலமும், சட்டக் கல்வியை மேம்படுத்துதல் மற்றும் ADR பொறிமுறைகளைப் பயன்படுத்துவதை மேம்படுத்துதல் மற்றும் அதற்கு வசதி செய்து கொடுத்தல் ஆகியவற்றின் மூலமும், வழக்குகளில் ஏற்படும் தாமதங்கள் மற்றும் அவை நீதிமன்றங்களில் தேங்கிக்கிடத்தல் என்பன குறைவடைவதைக் காண்பதற்கும், மக்களை மையமாகக் கொண்ட நீதிக்கட்டமைப்பின் கொள்கைகளை மேம்படுத்துவதற்கும் நாங்கள் எதிர்பார்க்கிறோம்.” என USAID செயற்பணி இயக்குநர் அலி எசத்யார் கூறினார். “ஒரு வலுவான நீதிக்கட்டமைப்பானது சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்வது மட்டுமன்றி, அதற்கான அணுகலையும் எளிதாக்குகிறதென நாங்கள் நம்புகிறோம்.” என அவர் மேலும் கூறினார்.

வர்த்தக மத்தியஸ்தத்தை மேற்கொள்ளவிருக்கும் புகழ்பெற்ற இலங்கை நிறுவனங்கள்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)