வட்டுக்கோட்டையை நோக்கி படையெடுத்த புலம்பெயர் தமிழர்கள்

உறவுகளின் துயர் பகிர்வு

பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

வட்டுக்கோட்டையை நோக்கி படையெடுத்த புலம்பெயர் தமிழர்கள்

வட்டுக்கோட்டையில் தமிழர் தாயகத்தில் தற்போதும் பாவனையிலுள்ள பல பத்தாண்டுகளுக்கு முற்பட்ட வாகனங்களின் பவனி இன்றைய தினம் (15) சனி இடம்பெற்றது.

பழமை வாய்ந்த வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் 200ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு பழைய மாணவர் வார ஆரம்ப நிகழ்வான நடை பவனி மற்றும் வாகன பவனியிலேயே இந்த பழமை வாய்ந்த வாகனங்கள் பவனி வலம் வந்தன.

புலம்பெயர் தேசங்கள் முழுவதிலும் இருந்து வருகை தந்துள்ள கல்லூரியின் பழைய மாணவர்கள் இந்த நிகழ்வுகளில் பங்கேற்றனர்.

மேலும், ஆரம்ப நிகழ்வாகப் பழைய மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட நடை – வாகன பவனி இன்று சனிக்கிழமை (ஜூலை 15) காலை 7 மணிக்குக் கல்லூரி வாசலில் இருந்து ஆரம்பமாகி மீண்டும் கல்லூரி வாசலை வந்தடைந்தது.

வட்டுக்கோட்டை சந்தி – கோட்டைக்காடு – அராலி – செட்டியார்மடம் – துணைவி, நவாலி – ஆனைக்கோட்டை – மானிப்பாய் – சண்டிலிப்பாய் – பண்டத்தரிப்பு - சித்தங்கேணி – வட்டுகோட்டை வழியாக யாழ்ப்பாணக் கல்லூரியினை பவனி இவ்வாறு வந்தடைந்தது.

வட்டுக்கோட்டையை நோக்கி படையெடுத்த புலம்பெயர் தமிழர்கள்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)