
posted 19th July 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
வடமராட்சியில் சிவசிதம்பரம் நூற்றாண்டு விழா
தமிழர் விடுதலை கூட்டணியின் முன்னாள் தலைவரும் உடுப்பிட்டி, நல்லூர் தொகுதிகளின் பாராளுமன்ற உறுப்பினருமான முருகேசு சிவசிதம்பரத்தின் பிறந்த நூற்றாண்டு நினைவு விழா நாளை மறுதினம் வியாழக்கிழமை (20) மாலை 3 மணிக்கு வடமராட்சி கரவெட்டி சம்பந்தர் கடையடி மகேசன் விளையாட்டு மைதானத்தில் நடைபெறவிருக்கிறது.
யாழ்ப்பாண பல்கலைக்கழக பேராசிரியர் கு. மிகுந்தன் தலைமையில் நடைபெறும் இவ்விழாவில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், கொழும்பு பல்கலைக்கழக சட்டபீடத்தின் முன்னாள் தலைவர் பேராசிரியர் வீ.ரி. தமிழ்மாறன், யாழ்ப்பாண பல்கலைக்கழக தமிழ்த்துறை முன்னாள் தலைவர் பேராசிரியர் சி. சிவலிங்கராஜா, தினக்குரல் முன்னாள் பிரதம ஆசிரியர் வீ. தனபாலசிங்கம், சிவசிதம்பரத்தின் மகள் திருமதி நிராஞ்சலி தேவராஜ் ஆகியோர் உரையாற்றுவர்.
தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி விழாவில் கௌரவிக்கப்படுவார்.
அமரர் சிவசிதம்பரத்தின் அரசியல் வாழ்வு ஆவண நூலொன்றும் வெளியிடப்படும். கலை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)