
posted 16th July 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
யாழில் கவனயீர்ப்பு போராட்டம்
“பிரிப்பதற்கு இடங்கொடோம் ஒன்றாய் நாம் பறந்திடுவோம்” எனும் தொனிப்பொருளில் யாழில் கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.
மக்கள் விடுதலை முன்னணியின் இளைஞர் அமைப்பான சோசலிச இளைஞர் சங்கத்தின் ஏற்பாட்டில் துண்டுப் பிரசுர விநியோகமும் கவனயீர்ப்புப் போராட்டமொன்றும் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது சிங்கள தமிழ் முஸ்லீம் நல்லிணக்கம் நீடுழி வாழ்க, இனவாத அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்போம், தேசிய ஒற்றுமைக்காக போராடுவோம் என பாதைகளையும் ஏந்தியிருந்தனர்.
மேலும் தேசிய நல்லிணக்கத்தை மீண்டும் பிரிப்பதற்கு இடமளிக்க வேண்டாம் என்பன உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் எழுப்பினர்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)