
posted 2nd July 2023
உறவுகளின் துயர் பகிர - சிரம் நெகிழ்ந்து வரவேற்கும் இணையத்தளம்
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கருத்துக்கள்
விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே. பிரபாகரனின் மரணம், மரபணு பரிசோதனை தொடர்பாக எனக்கு எதுவும் தெரியாது. நான் இறுதிப் போர் காலத்தில் சில வாரங்கள் மட்டுமே பதில் பாதுகாப்பு அமைச்சராக இருந்தேன் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மூன்று நாள் பயணமாக யாழ்ப்பாணம் வந்த மைத்திரிபால சிறிசேன நல்லூரில் அமைந்துள்ள சிறீ லங்கா சுதந்திர கட்சியின் யாழ். மாவட்ட பணிமனையில் இன்று (02) செய்தியாளர்களைச் சந்தித்து செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த மைத்திரிபால,
“விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரபணு பரிசோதனை தொடர்பாக எனக்கு எதுவும் தெரியாது. நான் இறுதி யுத்த காலத்தில் இரண்டு வாரங்களுக்கு மட்டுமே பதில் பாதுகாப்பு அமைச்சராக இருந்தேன். அதனால் எனக்கு அதைப் பற்றி எதுவும் தெரியாது. எனக்கு அதை பற்றி யாரும் எதுவும் சொல்லவில்லை.
பிரபாகரன் கொல்லப்பட்டாரா என்பது எனக்கு தெரியாது. அது மேல் மட்டத்தை சேர்ந்தவர்களுக்கே தெரியும். அவர்களே அதை கட்டுப்படுத்தினர்கள் என்றார்.
இதேநேரம், 2015 ஜனாதிபதி தேர்தல் காலம், அதன் பின்னரான காலத்திலும் இறுதிப் போரில் தனக்கு பெரும் பங்கு இருப்பதாக தெரிவித்து வந்தமை கவனிக்கத்தக்கது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)