
posted 1st July 2023
உறவுகளின் துயர் பகிர
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ் விஜயம்
யாழ்ப்பாணம் வந்துள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (01) யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கும் சென்று அங்குள்ள நிலைமைகளை அவதானித்தார்.
அங்கு சென்ற மைத்திரிபால சிறிசேனவை மருத்துவமனையின் பணிப்பாளர் மருத்துவர் த. சத்தியமூர்த்தி வரவேற்றார்.
தொடர்ந்து, மருத்துவமனையின் செயல்பாடுகளையும், விடுதிகளையும் பார்வையிட்ட முன்னாள் ஜனாதிபதி நோயாளர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களோடு கலந்துரையாடினார்.
சுகாதார அமைச்சராக தான் பதவியேற்ற காலத்தில் அடிக்கல் நாட்டப்பட்டு ஜனாதிபதி காலத்தில் திறந்துவைக்கப்பட்ட மருத்துவமனை கட்டடத் தொகுதியையும் பார்வையிட்டார்.
அந்தவேளை, இன்று சனிக்கிழமை காலை வேளையில் பிறந்த ஆண் குழந்தை ஒன்றையும் இதன்போது முன்னாள் ஜனாதிபதி ஆசீர்வதித்தார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)