
posted 9th July 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
முதியவர் மரணம்
யாழ்ப்பாணம் - சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏ9 வீதியின் மீசாலை சந்தியில் நேற்று (08) சனி மாலை இடம் பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் பலியாகியுள்ளார்.
யாழ்ப்பாணத்திலிருந்து மீசாலையில் உள்ள உறவினர் ஒருவரது வீட்டிற்கு செல்வதற்காக பேருந்தில் வந்திறங்கிய குறித்த முதியவர் வீதியை கடக்க முற்பட்ட போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் காயமடைந்துள்ளார்.
விபத்தையடுத்து மீசாலை சந்தியில் நின்ற முச்சக்கரவண்டி சாரதிகள் காயமடைந்த முதியவரை மீட்டு சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதித்தனர். எனினும் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார். இவ்விபத்தில் 78/7c , கஸ்தூரியார் வீதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 66 வயதான பத்மநாதன் கதிர்வேல் என்பவரே பலியாகியுள்ளார்
விபத்தை ஏற்படுத்தியவர்கள் இதுவரை கைது செய்யப்படாத நிலையில் விபத்து தொடர்பாக சாவகச்சேரி பொலீசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். விபத்தை ஏற்படுத்தியவர்கள் தப்பிச் சென்றுள்ளதாகவும் அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் சாவகச்சேரி பொலிசார் தெரிவித்தனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)