
posted 7th July 2023
உறவுகளின் துயர் பகிர்வு - ஆன்மாக்களின் மனநிறைவு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
மீனவர்களுக்கு நீர் விநியோகத் திட்டம்
பூநொச்சிமுனை மீனவர்களுக்கான நீர் விநியோகத் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
சுமார் 25 லட்சம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த நீர் விநியோகத் திட்டத்தின் மூலம் பூநொச்சிமுனை ஆழ்கடல் மீனவர்கள் மற்றும் மீனவர்கள் நன்மை அடைய உள்ளனர்.
தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் நிதி பங்களிப்புடன் காத்தான்குடி நகர சபை மற்றும் பூநொச்சிமுனை ஆழ்கடல் மீனவர் அமைப்புக்களின் உதவியுடன் இந்த நீர் விநியோகத் திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது .
பூநொச்சிமுனை அல்பரக்கத் கிராம மீனவர் சங்கத்தின் செயலாளரும் சமூக செயற்பாட்டாளருமான எம்.வை. ஆதம்லெவ்வை தலைமையில் இந்த நீர்வழங்கல் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)