
posted 15th July 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
மீண்டும் திறக்கப்படாத வடமாகாணப் பாடசாலைகள்
வடக்கு மாகாணத்தில் 200 பாடசாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில் உள்ளன எனவும் போருக்கு பின்னர் 64 பாடசாலைகள் இன்னமும் மீள ஆரம்பிக்கப்படவில்லை எனவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;
100 இற்கும் குறைவான மாணவர்களை கொண்ட பல பாடசாலைகள் மூடப்படும் அபாய நிலையை எதிர்கொண்டுள்ளன. இலங்கை முழுவதும் தற்பொழுது 35,000 இற்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை நிலவுகின்றது.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தலா 2000 இற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவுவதுடன், கிழக்கு மாகாணத்தில் கஷ்டப் பிரதேசங்களில் ஆசிரியர் பற்றாக்குறை அதிகரித்து காணப்படுகின்றது.
மூதூர் கல்வி வலயத்தில் 1300 இற்கும் அதிகமான ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை காணப்படுகின்றது.
ஆசிரியர் பற்றைக்குறையை உடனடியாக தீர்ப்பதற்கு அரசாங்கம் எந்தவொரு நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை.
அது மட்டுமன்றி, இலவச கல்வியை சீரழித்து மாணவர்களிற்கு தொடர்ந்தும் அரசாங்கம் அநீதி இழைத்து வருகின்றது-என்றார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)