மாவை சேனாதிராசாவின்  ஊடக சந்திப்பு

உறவுகளின் துயர் பகிர்வு

பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

மாவை சேனாதிராசாவின் ஊடக சந்திப்பு

கொக்குத்தொடுவாயில் தோண்டப்படும் மனிதப் புதைகுழிகள் சர்வதேசத்தின் முன்னிலையில் இனப்படுகாலையை நிருபிப்பதற்குரிய ஆதாரங்களாகும் என தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்தார்.

நேற்று (08) சனி நடந்த தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தின் பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் பிரதானமாக தமிழரசுக் கட்சியின் மாநாட்டை நடத்துவது பற்றியும் உறுப்பினர்களையும் கிளைகளையும் பதிவு செய்வதைப் பற்றியும் இனப்படுகொலைக்கு ஒப்பான ஜூலைப் படுகொலைகளின் 40 ஆண்டு நிறைவு சம்பந்தமான நிகழ்ச்சிகளைப் பற்றியும் முக்கியமாக பேசியிருந்தோம். இத்துடன் இந்த மாத இறுதியில் துக்க நாட்களாக அனைத்து மாவட்டங்களிலும் நிகழ்வுகளைக் கடைப்பிடிக்க அறிவுறுத்தும்படியும் கலந்தாலோசித்திருந்தோம்.

போரின்போது இடம்பெற்ற இனப்படுகொலை சம்பந்தமாக நாங்கள் ஆய்வுகளை மேற்கொண்டு மனித உரிமை ஆணைக்குழுவி்ல் அறிக்கைகளை சமர்ப்பித்திருந்தோம்.

தற்போது கொக்குத்தொடுவாயில் மனிதப் புதைகுழிகள் தோண்டப்படுகின்ற போது துயரம் மிக்க கண்டுபிடிப்புக்கள் இடம்பெறுகின்றன. பல இடங்களில் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்படுகின்றன. இவை சர்வதேசத்தின் முன்னிலையில் இனப்படுகாலையை நிரூபிப்பதற்குரிய ஆதாரங்களாகும். இதற்கு அரச மற்றும் சர்வதேச ஆணைக்குழு முறையாக இயங்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கின்றோம்.

தமிழரசுக் கட்சியின் புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்ட பின் மாநாடு நடத்தப்படும். தமிழரசுக் கட்சியின் மாநாட்டு அமைப்பை அடுத்த மத்திய செயற்குழு கூட்டத்தில் அறிவிக்க எதிர்பார்த்துள்ளோம்.
மகாநாட்டில்தான் பதவி மாற்றம் இடம்பெறுவது சம்பிரதாயம். அதையே கட்சியின் அமைப்பு விதியும் சொல்கின்றது. தற்போது 7 இலட்சத்துக்கு மேற்பட்டோர் உதவித் தொகை நிறுத்தத்தால் முறையீடுகள் செய்வதற்காக போராடுகின்றார்கள். அதை பற்றி மிக விரைவி்ல் அரசுடனும் சர்வதேச மட்டத்திலும் பாராளுமன்ற உறுப்பினர்களூடாக கலந்தாலோசிக்கப்படும்.
இதேவேளை ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெயரை பதிவு செய்தல் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு நிராகரித்திருந்தது. கடந்த காலங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரில் தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்திலேயே போட்டியிட்டிருந்தனர்.

அவர்கள் அந்தச் சின்னத்தில் போட்டியிட்டதால் தமிழரசுக் கட்சியின் அங்கத்தவர்களாகவே கருதப்படுவர். இந்நிலையில் தற்போது தேர்தல் ஆணைக்குழுவுக்கு எந்தப் பரிந்துரைகளை முன்வைத்து பதிவு செய்வதற்கு அனுப்பினார்கள் என்பது எமக்குத் தெரியாது என்றார்.

மாவை சேனாதிராசாவின்  ஊடக சந்திப்பு

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)