
posted 19th July 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
மாணவியை தாக்கிய பாடசாலை அதிபர் கைது
தீவகத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 9 வயதான மாணவியை தாக்கினார் என்ற குற்றச்சாட்டில் பாடசாலை அதிபரை ஊர்காவற்துறை பொலிஸார் 16.07.2023 அன்று கைது செய்துள்ளனர்.
மாணவியை பாடசாலையில் வைத்து அதிபர் கடுமையாக தாக்கியதில் மாணவியின் உடலில் தழும்புகள் ஏற்பட்டுள்ளன.
இந்தச் சம்பவம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இந்நிலையில், மாணவி தாக்கப்பட்டமை குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழு பொலிஸாரிடம் வினவியபோது, தாம் அதிபரை கைதுசெய்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் என்றும் திங்கட்கிழமை (17) ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் அதிபரை முற்படுத்தினர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை இந்தச் சம்பவம் தொடர்பிலான உத்தியோகபூர்வ விசாரணைகளை திங்கட்கிழமை முன்னெடுக்கப்பட்டது என மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் த. கனகராஜ் தெரிவித்துள்ளார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)