மத நல்லிணக்கத்தோடு வாழ்ந்த இந்துக்களும், பௌத்தர்களும்

உறவுகளின் துயர் பகிர்வு - ஆன்மாக்களின் மனநிறைவு

பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

மத நல்லிணக்கத்தோடு வாழ்ந்த இந்துக்களும், பௌத்தர்களும்

யாழ்ப்பாணம் வந்திருந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஈழம் சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு க. சச்சிதானந்தனை அவரின் இல்லத்துக்கு சென்று சந்தித்தார்.

மரியாதை நிமித்தம் இந்த சந்திப்பு கடந்த ஞாயிற்றுக்கிழமை (02) நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டது.

கடந்த 29ஆம் திகதி நடந்த சந்திப்பு ஒன்றில், இந்துக்களும், பௌத்தர்களும் மத நல்லிணக்கத்தோடு வாழ்ந்தார்கள் என்பதற்கான வரலாற்று ஆதாரங்களை முன்வைத்த மறவன்புலவு சச்சிதானந்தன் அண்மைக் காலமாக அதற்கு ஆபத்து ஏற்படுவதாக சுட்டிக்காட்டியிருந்தார். இந்த நிலையில், சச்சிதானந்தனின் அனுபவத்துக்கும், வரலாற்று ஆய்வுக்கும், சமூக பணிக்கும் மதிப்பளிக்கும் விதமாக அவரின் இல்லத்துக்கு சென்று அவரை சந்தித்தார் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்தச் சந்திப்பின் போது, இந்துமத நூல்கள், 15 மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட பன்னிரு திருமுறைகளின் சிங்கள மொழி பதிப்பு, சிவபெருமான் தொடர்பான சிங்கள மொழி நூல், யாழ். மாவட்டத்தில் ஆக்கிரமிப்புக்குள்ளான இந்து ஆலயங்கள் பற்றிய ஆய்வுக்கட்டுரையின் பிரதிகளை மைத்திரிபால சிறிசேனவுக்கு மறவன்புலவு சச்சிதானந்தன் வழங்கியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மத நல்லிணக்கத்தோடு வாழ்ந்த இந்துக்களும், பௌத்தர்களும்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)