
posted 29th July 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
பொது முடக்கத்தால் வடக்கில் முழுமையாக இயல்புநிலை பாதிப்பு!
மனிதப் புதைகுழி விவகாரத்துக்கு நீதி கோரியும் சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும் வடக்கு, கிழக்கில் நேற்று (28) வெள்ளிக்கிழமை பொது முடக்கம் கடைப்பிடிக்கப்பட்டது. இதனால், வடக்கில் முழுமையாக இயல்புநிலை பாதிக்கப்பட்டது.
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் விடுத்த அழைப்பின் பேரில் இந்தப் பொது முடக்கம் கடைப்பிடிக்கப்பட்டது. அரசியல் கட்சிகள், பல்கலைக்கழகங்களின் மாணவர் அமைப்புகள், வணிகர் கழகங்கள் மற்றும் பொது அமைப்புகள் ஆதரவு வழங்கியிருந்தன.
இந்த அழைப்பை ஏற்று வடக்கு மாகாணத்தின் முக்கிய நகரங்கள் அனைத்திலும் வணிக நிலையங்கள் அடைக்கப்பட்டன. மாணவர்கள் பாடசாலைக்கு செல்லாததால் அவை இயங்கவில்லை. தனியார் போக்குவரத்து சேவை முழுமையாகப் பாதிக்கப்பட்டது.
இதனால், வடக்கு மாகாணத்தில், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் மாவட்டங்கள் முழுமையாக இயல்பு நிலை பாதிக்கப்பட்டன.
எனினும், கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் வாழும் பகுதிகளே ஓரளவுக்கு இயல்பு நிலையை இழந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)