
posted 8th July 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
புதிய மாணவிகளுக்கான கல்வி நடவடிக்கை
சாய்ந்தமருது தைபா மகளிர் அரபுக் கல்லூரியில் புதிதாக அனுமதிக்கப்படும் மாணவிகளுக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் திங்கட்கிழமை (10) ஆரம்பமாகும் என்று கல்லூரி அதிபர் அஷ்ஷெய்க் எஸ்.எச். ஆதம்பாவா மதனி அறிவித்துள்ளார்.
அண்மையில் இடம்பெற்ற நேர்முகப் பரீட்சையில் தெரிவு செய்யப்பட்ட மாணவிகள் அன்றைய தினம் காலை 8.30 மணி தொடக்கம் பதிவுகளை மேற்கொள்ளுமாறும் அவர் கேட்டுள்ளார்.
கடந்த 2012ஆம் ஆண்டு தொடக்கம் இயங்கி வருகின்ற சாய்ந்தமருது தைபா மகளிர் அரபுக் கல்லூரியில் மௌலவியா பட்டத்திற்கான அல்ஆலிம் இஸ்லாமிய கற்கை நெறியுடன் ஜீ.சி.ஈ. உயர் தரப் பரீட்சைக்கும் மாணவிகள் தயார்படுத்தப்படுகின்றனர்.
இதுவரை 39 மாணவிகள் இக்கல்லூரியில் இருந்து மௌலவியா பட்டம் பெற்றுள்ளனர்.
இவர்களுள் பல மாணவிகள் பல்கலைக்கழக அனுமதி பெற்று, உயர் கல்வி கற்று வருவதுடன் கற்கைகளை பூர்த்தி செய்த சிலர் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று வெளியேறியுமுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)