
posted 19th July 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
பிராந்திய மருத்துவ ஆய்வுகூடம்
கல்முனை பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர் பிரிவிலுள்ள வைத்தியசாலைகளின் சேவை கருதி பிராந்திய மருத்துவ ஆய்வுகூடம் ஒன்று ஸ்தாபிக்கப்படவிருக்கின்றது.
குறித்த மத்திய (பிராந்திய) ஆய்வு கூடம் பாலமுனை பிரதேச வைத்தியசாலை வளாகத்தில் அமையவிருக்கின்றது.
வைத்தியசாலைகளில் காணப்படும் மருத்துவ ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளர்களுக்கான பற்றாக்குறை மற்றும் மருத்துவ ஆய்வுகூட உபகரணங்களின் பற்றாக்குறை மற்றும் வளங்களை முகாமைத்துவப்படுத்தும் செயற் திட்டம் என்பனவற்றை கருத்திற் கொண்டு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஐ.எல்.எம். றிபாஸ் அவர்களினால் முன்மொழியப்பட்ட இப்பிராந்திய ஆய்வுகூடம் தொடர்பான பிரேரணை மாகாண சுகாதார சேவைகள் பணிமனை மற்றும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சு தேசிய சுகாதார அமைச்சு என்பவற்றுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அதற்கான அங்கீகாரம் கிடைக்கப் பெற்றிருக்கின்ற நிலையில் குறித்த மத்திய ஆய்வுகூடம் பாலமுனை பிரதேச வைத்தியசாலை வளாகத்தில் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)