பாரிய ஆர்ப்பாட்டம்

உறவுகளின் துயர் பகிர்வு

பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

பாரிய ஆர்ப்பாட்டம்

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் இன்று ஞாயிறு (09) பிற்பகல், அரசுக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றை நடாத்தினர்.

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக ஒலுவில் வளாக முன்றலிலிருந்து, சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரம் கொண்ட நிந்தவூர் வரையான பிரதான வீதியில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் பெருந்தொகையை தமிழ், முஸ்லிம், சிங்கள (பல்கலைக்கழக) மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளின் கீழ் கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட மக்களின் உரிமைகளைப் பறிக்கும் ரணில் - ராஜபக்ஸ குழுவை இல்லாதொழிப்போம் என்ற முக்கிய கோஷத்துடன், ஆறு மாதங்களுக்கு மேல் சிறைத்தண்டனை அனுபவிக்கும் கெலும்தில்சானை உடனே விடுதலை செய் எனும் கோரிக்கையுடனும் இந்தப் பாரிய ஆர்ப்பாட்டப் பேரணி முன்னெடுக்கப்பட்டது.

அதேவேளை ஆர்ப்பாட்டப் போரணியில் கலந்து கொண்டோர் ரணில் அரசுக்கு எதிராக தொடர்ச்சியாகப் பல கோஷங்களை எழுப்பிய வண்ணமே பேரணியில் சென்றனர்.

“நாட்டுக்காகப் போராடுவோம்” அராஜக ஆட்சியை ஒழிப்போம் - சமுர்த்தி உள்ளிட்ட நிவாரணங்களை மக்களுக்கு வழங்கு, வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ப மஹாபொல உதவித் தொகையை அதிகரிப்பதுடன், உரிய தவணையில் வழங்கு – லைகியம், என்.எஸ்.பி.எம்., கொத்தலாவலைப் பட்டங்களை விற்பனை செய்யாதே – என்பன போன்ற வாசகங்களடங்கிய சுலோக அட்டைகளை ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்து கொண்டோர் ஏந்தியிருந்ததுடன் அவற்றைக் கோஷமாகவும் எழுப்பிய வண்ணமிருந்தனர்.

பேரணி நிந்தவூரின் கிட்டங்கி சந்தியை அடைந்ததும் மாலை இருள் சூழ்ந்தும் அவ்விடத்தில் திரண்டு நின்று கண்டன உரைகளை மாணவர்கள் ஆற்றினரென்பது குறிப்பிட்டத்தக்கது.

பாரிய ஆர்ப்பாட்டம்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)