
posted 19th July 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
பாராளுமன்ற உறுப்பினர் பார்வையிட்டார்
அம்பாறை மாவட்டம் பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட குளங்களை உலக வாங்கியின் 75 மில்லியன் நிதி ஒதுக்கீட்டின் மூலம் புனரமைப்புச் செய்து விவசாய நடவடிக்கைகளை மேம்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கோமாரி பிரதேச வால்குளிக்குளத்தினைப் புனரமைப்புச் செய்வதற்கு வன பாதுகாப்புத் திணைக்களம் அனுமதி மறுத்து வருகின்றது.
வனப் பாதுகாப்புத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் இக்குளமானது புனரமைப்புச் செய்யப்படுமிடத்து சுற்றுயுள்ள 250 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயம் செய்யக்கூடிய நிலைமை ஏற்படும்.
மேற்படி குளத்தின் புனரமைப்பு தொடர்பில் அனுமதி மறுக்கப்பட்டமையை பிரதேச மக்கள் அம்பாறை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசனின் கவனத்திற்குக் கொண்டு வந்தமையையிட்டு மேற்படி பிரதேசத்திற்குக் களவிஜயம் மேற்கொண்டு குளத்தினையும், குறித்த விவசாய நிலங்களையும் பாராளுமன்ற உறுப்பினர் பார்வையிட்டார்.
அதனைத் தொடர்ந்து முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சுபோகரன் தலைமையில் கோமாரி பல்தேவைக் கட்டடத்தில் விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள், பிரதேச மக்களுடனான கலந்துரையாடலில் குறித்த விடயம் தொடர்பில் ஆராயப்பட்டது.
இதன்போது வனபாதுக்காப்பு அமைச்சருடன் தொடர்பு கொண்டு கலந்துரையாடி உரிய அனுமதியைப் பெற்று இக்குளத்தினைப் புனரமைப்பச் செய்வதற்கு ஆவன செய்து வருவதாகப் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)