
posted 25th July 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
பாப்பரசரின் பிரதிநிதி யாழ்ப்பாணம் வருகை
பாப்பரசர் பிரான்சிஸின் இலங்கைக்கான பிரதிநிதி வண. கலாநிதி பிறாயன் ஊடக்வே யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ளார் என்று யாழ்ப்பாண மறை மாவட்ட குரு முதல்வர் ஜெபரட்ணம் அடிகளார் அறிவித்துள்ளார்.
பாப்பரசரின் பிரதிநிதி மூன்று நாள் அப்போஸ்தலிக்க பயணமாக யாழ்ப்பாணத்துக்கு இன்று திங்கட்கிழமை வருகை தந்துள்ளார்.
நாளை செவ்வாய்க்கிழமை குருதகர் புனித யாகப்பர் ஆலய திருவிழாவிலும் நாளைமறுதினம் புதன்கிழமை இளவாலை புனித அன்னாள் ஆலயத் திருவிழாவிலும் பங்கேற்பார்.
அத்துடன், தீவக மறைக்கோட்ட பங்குகளையும் நேரில் சென்று பார்வையிடுவார். அத்துடன், முல்லைத்தீவு மாவட்டத்தில் போரால் பாதிக்கப்பட்ட மக்களையும் இடங்களையும் தரிசிப்பார். சுனாமி நினைவாலயத்தில் இயற்கை அனர்த்தத்தால் உயிரிழந்தோருக்கான அஞ்சலி நிகழ்விலும் பங்கேற்பார்.
மேலும், பிறாயன் ஊடக்வே ஆண்டகை யாழ்ப்பாணம் நகரில் தங்கியிருக்கும் காலத்தில் குருக்கள், துறவிகள், பொதுநிலை இறைமக்களைச் சந்திப்பதுடன், புனித மடுத்தினார் குருமடம், புனித சவேரியார் குருமடம், செபமாலை தாசர் சபை ஸ்தாபகர் இறை அடியார் தோமஸ் அடிகளாரின் கல்லறைக்கும் செல்லும் அவர், யாழ்ப்பாணத்தின் பிரசித்தி பெற்ற இடங்களையும் பார்வையிடுவார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)