
posted 24th July 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
பலவகைச் செய்தித் துணுக்குகள்

எஸ் தில்லைநாதன்
வடமராட்சி கிழக்கு - குடத்தனை கடற்கரையில் இருந்து ஒரு தொகுதி வெடி பொருட்கள் பருத்திதுறைப் பொலிஸாரால் ஞாயிற்றுக் கிழமை (23) மீட்கப்பட்டன.
குடத்தனை வடக்கு பகுதியில் உள்ள காணி ஒன்றில் அடையாளம் காணப்பட்ட எண்ணெய் பரல் ஒன்றில் இருந்து குறித்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டன.
மேற்படி கடற்கரையில் ஆயுதங்கள் புதைத்திருக்கின்றன என்று இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதுதொடர்பில் கிடைக்கப்பெற்ற தகவலடையடுத்து பருத்தித்துறை பொலிஸார் அந்தப் பகுதியை தோண்டினர்.
இதன்போது ரி- 56 ரக துப்பாக்கி இரண்டு அதற்கான தோட்டாக்கள் அடங்கிய பெட்டி ஒன்று என்பன மீட்கப்பட்டுள்ளது.
குறித்த வெடிபொருட்கள் விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் தெரிவிக்கப்பட்டது.
புகையிரதக் கடவையில் காவுகொள்ளப்படும் உயிர்கள்
எஸ் தில்லைநாதன்
சமிக்கையை மீறி செல்கின்றனர். இதன் காரணமாகவே பல உயிர்கள் காவுகொள்ளப்படுகின்றது என கிளிநொச்சி புகையிரத நிலைய அதிபர் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்தார்.
கடந்த 13.07.2023 தொடக்கம் 5 மாதங்களின் பின்னர் மீண்டும் 15.07.2023 அன்று தொடக்கம் புகையிரத சேவை மீண்டும் வழமை போல் ஆரம்பித்துள்ளது.
இந் நிலையில் தற்பொழுது புகையிரதக் கடவையில் புகையிரதம் வருவதாற்கான சமிக்கை காட்டப்பட்ட நிலையிலும், மக்கள் அதனை பொருட்படுத்தாது சமிக்கையை மீறி செல்கின்றனர்.
இதன் காரணமாகவே பல உயிர்கள் காவுகொள்ளப்படுகின்றது. எனவே, மக்கள் மிகவும் விழிப்புடன் செயல்பட வேண்டும் எனவும், வீதி சமிக்கைகளை மதித்து புகையிரதம் செல்லும் வரை சில நிமிடங்கள் தாமதித்து செல்வதன் மூலம் உயிர்சேதம், பொருட்சேதம் என்பவற்றை தவிர்த்துக் கொள்ளமுடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
மக்கள் காணிகளைச் சொந்தமாக்க முயலும் அரசு
எஸ் தில்லைநாதன்
கட்டைக்காட்டில் கடற்படைக்கு காணி அளவிடும் முயற்சியை காணி உரிமையாளர், பிரதேச மக்கள் மற்றும் அரசியல்வாதிகளால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் இன்று (24) திங்கள் காலை 9 மணியளவில் இடம் பெற்றுள்ளது. தனியார் ஒருவருக்கு சொந்தமான காணியை கடற்படைக்கு சுபீகரிப்பதற்காக நில அளவைத் திணைக்களம் யாழ்ப்பாணத்திலிருந்து வருகை தந்திருந்தனர்.
அவர்களை மறித்த காணி உரிமையாளர், கிராம மக்கள், அரசியல்வாதிகள் இது எங்களுடைய சொந்த காணி. இதனை அளவீடு செய்வதற்கு அனுமதிக்க முடியாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் குறித்த நில அளவை அதிகாரியால் தனக்கு எழுத்து மூலமாக கடிதம் ஒன்றினை தருமாறு கூறப்பட்ட நிலையில் காணி உரிமையாளர், வடமராட்சி கிழக்கு பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், பாராளுமன்ற உறுப்பினர்களான பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வராசா கஜேந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் மகாசபை தலைவர் இரத்தினசிங்கம் முரளிதரன், வடமராட்சி கிழக்கு மக்கள் ஒன்றியத்தின் தலைவர் திரு செல்வன் ஆகியோர் ஒப்பமிட்டு கடிதம் வழங்கப்பட்ட நிலையில் குறித்த காணி அளவீடு செய்வதை நிறுத்திவிட்டு நில அளவைத் திணைக்களத்தினர் திரும்பிச் சென்றுள்ளனர்.
இதேவேளை, வடமராட்சி கிழக்கில் இன்றிலிருந்து தொடர்ச்சியாக ஐந்து தினங்கள் கடற்படைக்கு காணி சுபீகரிப்பு நடவடிக்கைகள் இடம் பெற உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சுவீகரீக்கப்படவிருக்கின்ற அனைத்து காணிகளும் தனியாருக்கு சொந்தமானது என்று மக்கள் தெரிவிக்கின்றனர்.
இன்றைய தினம் ஜீமிஸ் யோகராசா என்பவருக்கு சொந்தமான 15 பேச்சஸ் காணியே அளவீடு செய்யும் நடவடிக்கை முறியடிக்கப்பட்டுள்ளது.

புகையிரதக் கடவை விபத்து
எஸ் தில்லைநாதன்
பாதுகாப்பற்ற புகையிரதக் கடவையை கடக்க முயன்ற லொறியை ரயில் மோதியதில் இருவர் படுகாயமடைந்து வவுனியா பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த கடுகதி ரயிலுடன் மோதியே இந்த விபத்து இடம்பெற்றது.
வவுனியா - திருநாவற்குளம் 3ஆம் ஒழுங்கையில் ஞாயிற்றுக் கிழமை (23) மதியம் இடம்பெற்ற இந்த விபத்தில் தாண்டிக்குளத்தை சேர்ந்த இருவரே படுகாயமடைந்தனர்.
விபத்துக் குறித்து பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)